sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தங்கவயல் செக்போஸ்ட்

/

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்


ADDED : நவ 03, 2025 04:53 AM

Google News

ADDED : நவ 03, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓடும் நீரில் எழுதணுமா?

த ங்கமான சிட்டியில் தொழிற்சாலைகள் அமைக்க போவதாக சொல்லியே ஓட்டு வேட்டை நடத்திய ஒருத்தர், வெற்றி கண்டாரே தவிர, தொழிற்சாலை எதையும் ஏற்படுத்தல. அவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் ஆகல.

நாளுக்கு நாள் வேலை இல்லாதோர் பல்லாயிரம் பேர் வெளியூர்களுக்கு தினமும் செல்கிற பயணம் தான் முடியல. இந்த ஒரு அனுபவம், கோல்டு சிட்டிவாசிகளுக்கு பச்சை மரத்தில் ஆணி அடிச்சது போல இருக்குது.

மீண்டும் 25 ஆண்டுகளுக்கு பிறகு இதே ஆயுதத்தை இப்போது அதிகாரம் உள்ளவரும் பலவிதமான தொழிற்சாலைகள் கோல்டு சிட்டியில் வருவதாக தொடர்ந்து பேசி வராரு. இதையும் ஓடும் நீரில் எழுதணுமோ?

கோல்டு சிட்டியில் ம.அரசின் மண் வாரி இயந்திர தொழிற்சாலை வசம் பயன்படுத்தாமல் இருந்த, 1,000 ஏக்கர் நிலத்தை மா.அரசு வாங்கி, தொழில்துறை மேம்பாட்டு கழகத்திடம் ஒப்படைச்சிருக்காங்க.

இதன் பெயர் பலகைகள் வைத்ததற்கே, '20 சி' செலவழிச்சிருப்பதாக ஒரு தகவல் பேசப்படுது. இதுக்காக, '20 சி' செலவழிச்சதில் பேசப்பட்ட கமிஷன் தொகை, 'சூட்கேஸ்' சேர வேண்டியவங்களுக்கு போய் சேர்ந்ததா சொல்றாங்க. இது நெஜம் தானா?

கை கட்சியின் 'பி' டீம்

ரா. பேட்டையில் 1வது முதல் 6வது கிராஸ் வரை பெயர் பலகை வைத்திருக்காங்க. இதில் வார்டு கவுன்சிலர் பெயர், தொகுதி அசெம்பிளிக்காரர் பெயர், அந்த சாலையில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் பெயர் வைத்திருக்காங்க.

ஆனால், சிட்டி வளர்ச்சிக்கு ம.அரசின் நிதியை பெற்றுத் தருகிற எம்.பி., பெயரை இடம் பெற செய்யல. இதனால் கோல்டு சிட்டி 'புல்லுக்கட்டு பயில்வான்கள் கண்டும் காணாதவங்க போல இருக்காங்க.

செங்கோட்டைக்காரர் மீது இவங்களுக்கு என்ன அப்படி வெறுப்போ? தேர்தல் நேரத்தில் மட்டுமே அவங்க கட்சிக் கொடியை ஆட்டினால் போதுமென இருக்காங்களா? அல்லது இவங்க கோல்டு சிட்டியில் கை கட்சிக்கு, 'பி' டீம் போல வேலை பாக்குறாங்களா?

சிக்கனுக்கு சிக்கல்?

மை னாரிட்டி மயானத்தில் இறைச்சி கசாப்பு நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கண்ணை, வாயை மூடிக்கொண்டிருக்காமல் எதிர்ப்பு காட்டிய கைக்கார சிக்கன் வியாபாரிக்கு சிக்கல் கொடுக்க, 'ஹெல்த் டிபார்ட்மென்ட்'டை அதிரடி சோதனை நடத்த ஏவி விட்டிருக்காங்க.

இனி யாராவது, 'பவர்'காரருக்கு எதிர்ப்பு காட்டினால், எல்லா சோதனையும், வேதனையும் தானா வரும் என்ற எச்சரிக்கையை மற்றவங்க தெரிஞ்சக்க வேணுமாம். இன்னும் பலர் லிஸ்டில் இருக்காங்களாம். அவங்க எல்லாரையும் பணிய வைக்க அதிகாரம் வேலை செய்யுமாம்.

முடங்கிய முனிசி., தீர்மானம்!

மா நிலம் முழுதும் உள்ள பஸ் நிலையங்களில் மது கடைக்கு அனுமதி கிடையாது. ஆனால், விசித்திரமான கோல்டு சிட்டியில் மட்டுமே முனிசி., லைசென்ஸ் கொடுத்திருக்காங்க. ஆண்டுதோறும் கட்டணம் பெற்று லைசென்ஸ் புதுப்பித்து தராங்க.

உறுப்பினர்களின் வலியுறுத்தலால் மூடுவதற்கு முனிசி.,யில் தீர்மானம் நிறைவேற்றினாங்க. அதன் முடிவு என்னானது? இப்பவும் விற்பனை ஜோராக தானே நடக்குது. திறந்து விற்பனை செய்ய யார் அதிகாரம் கொடுத்தது? இதன் பின்னணியின் பேரம் என்ன; கைமாறியது எவ்வளவு?

யாரும் எதிலும் ஒத்துப்போனால் ஊரே ஒண்ணு கூடினாலும், அதிகாரம் இருக்கும் வரை சட்ட விரோதம் சட்டாம்பிள்ளையா தான் இருக்கும் போல.






      Dinamalar
      Follow us