sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாகன்கள் பிள்ளைகளுக்கு தற்காலிக வகுப்பறை

பாகன்கள் பிள்ளைகளுக்கு தற்காலிக வகுப்பறை

பாகன்கள் பிள்ளைகளுக்கு தற்காலிக வகுப்பறை


ADDED : ஆக 21, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 06:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மைசூரு : மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்க யானைகளுடன் வந்த பாகன்கள், உதவியாளர்களின் பிள்ளைகளுக்காக, அரண்மனை வளாகத்தில் தற்காலிக வகுப்பறை திறக்கப்பட்டு உள்ளது.

மைசூரு தசராவில் நடக்கும் ஜம்பு சவாரியில் பங்கேற்க, யானைகளுடன் அதன் பாகன்கள், உதவியாளர்கள் குடும்பத்துடன் வந்து உள்ளனர். இவர்களுக்காக, அரண்மனை வளாகத்தில் தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டு உள்ளது.

பெற்றோருடன் மைசூருக்கு வந்துள்ள அவர்களின் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, அரண்மனை வளாகத்தில், யானைகள் குளிக்கும் பகுதி அருகில் உள்ள கட்டடம், தற்காலிக வகுப்பறையாக மாற்றப்பட்டு உள்ளது.

தற்போது ஒன்பது யானைகளுடன் வந்த குடும்பத்தினரின் 20 பிள்ளைகள் பாடம் படித்து வருகின்றனர். அடுத்த வாரம் வர உள்ள ஐந்து யானைகளின் பாகன்கள், உதவியாளர்கள் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கும் பாடம் நடத்தப்படும்.

இப்பிள்ளைகளுக்கு இலவசமாக சீருடை, ஷூ, புத்தகங்கள், மதிய உணவு போன்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாடம் எடுக்க, இரு பெண் ஆசிரியைகள், ஒரு ஆண் ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us