sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பகலில் கரும்பு வெட்டு; இரவில் கொள்ளை மஹாராஷ்டிராவை சேர்ந்த 5 பேர் கைது

/

 பகலில் கரும்பு வெட்டு; இரவில் கொள்ளை மஹாராஷ்டிராவை சேர்ந்த 5 பேர் கைது

 பகலில் கரும்பு வெட்டு; இரவில் கொள்ளை மஹாராஷ்டிராவை சேர்ந்த 5 பேர் கைது

 பகலில் கரும்பு வெட்டு; இரவில் கொள்ளை மஹாராஷ்டிராவை சேர்ந்த 5 பேர் கைது


ADDED : ஜன 27, 2026 04:50 AM

Google News

ADDED : ஜன 27, 2026 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: பகலில் கரும்பு வெட்டும் வேலை செய்து கொண்டே, இரவில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்த மஹாராஷ்டிராவை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் சங்கர் பவார், 20, அபி போஸ்லே, 19, கரண் பவார், 20, மமதா போஸ்லே, 21, லட்சுமி கோஸ்லே, 40. இவர்கள் கரும்பு வெட்டும் பணிக்காக, கர்நாடகாவின் பாகல்கோட்டுக்கு வந்திருந்தனர். குளேதகுட்டாவின் பூதினகடா, ஹம்சனுார் கிராமங்களில் கரும்பு வெட்டுவதற்காக தங்கியிருந்தனர்.

பகல் நேரத்தில், கரும்பு வெட்டும் பணியை செய்த இவர்கள், இரவு நேரத்தில் முகமூடி அணிந்து, ஜெர்கின் போட்டு கொண்டு, கையில் டார்ச், இரும்பு தடியுடன் கொள்ளையர்களாக மாறுவர். வீடுகளில் புகுந்து அங்குள்ளவர்களை தாக்கி, தங்கநகைகள், பணத்தை கொள்ளையடித்து தப்பி விடுவர். மறுநாள் காலையில் வெட்டும் பணிக்கு செல்வர்.

கிராமங்களில் பல வீடுகளில் கொள்ளை நடந்தது குறித்து, பாகல்கோட் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார், பல கோணங்களில் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து, புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விசாரித்த போது, கரும்பு வெட்டும் பணிக்கு வந்தவர்களே, கொள்ளையர்கள் என்பதை கண்டுபிடித்தனர்.

ஐந்து பேரையும் கைது செய்தனர். ஆறு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் பாகல்கோட் மட்டுமின்றி, கதக் மாவட்டம் ரோணா தாலுகாவின் ஹொளேஹடகலி கிராமம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us