ADDED : ஏப் 29, 2026 01:38 AM

தங்கவயல்: உரிகம் சுவிம்மிங்பாத் லைன் கல்மேடு புதர் பகுதியில், நேற்று மதியம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
உரிகம் சுவிம்மிங்பாத் லைன் பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் சுரங்கத்தில் வெட்டி எடுத்த கருப்பு கற்களை குன்றுகள் போல கொட்டி வைத்துள்ளனர். இது, 'கல்மேடு' என்று அழைக்கப்படுகிறது. இங்கு முட் செடிகள் புதராக வளர்ந்துள்ளன. கோடை வெப்பத்தால், புதரை சுற்றியுள்ள உலர்ந்த செடி கொடிகளில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. அப்பகுதியின் பா.ஜ., தலைவர் பாண்டியன் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கல்மேடு பகுதியை சுற்றி, 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அவைகளுக்கு எந்த ஒரு சேதாரமும் ஏற்படாதவாறு தீ அணைக்கப்பட்டது.
ராபர்ட்சன்பேட்டை மகப்பேறு மருத்துவமனை அருகே பழக்கடையில் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
