/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா இன்று நிறைவு
/
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா இன்று நிறைவு
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா இன்று நிறைவு
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா இன்று நிறைவு
ADDED : ஜூலை 14, 2025 05:37 AM

தொம்மலுார் : ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம் விழா இன்று நிறைவு பெறுகிறது.
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், ஸ்ரீசாதுராம் சுவாமிகளின் 25ம் ஆண்டு ஆராதனை இரண்டாம் பாகம் விழா நடந்து வருகிறது.
நேற்று காலையில் சென்னை பாவ்யா ஹரிசங்கர் குழுவினரின் திருப்புகழ் பஜனை; மதுரை மீனாட்சி கோவில் ஸ்ரீஅவிநாசி ஓதுவார் குழுவினரின் சைவ திருமுறை இன்னிசை; மாலையில் எர்ணாகுளளம் ராதாகிருஷ்ணன் ஜி குழுவினரின் பஜனை நடந்தது. இரவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பகவத் பிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவு நாளான இன்று காலையில் சண்டி ஹோமம் சங்கல்பம், சண்டி பாராயணம், கன்யா, தம்பதி, சுவசினி பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, பகவத் பிரசாதம் நடக்கிறது.
மாலையில் ஆஞ்சநேய உத்சவம், பூஜை, அர்ச்சனை, ஹனுமன் சாலிசா பாராயணம் நடக்கிறது. தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

