/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹெப்பாலில் புதிய மேம்பாலம்; ஸ்கூட்டர் ஓட்டிய சிவகுமார்
/
ஹெப்பாலில் புதிய மேம்பாலம்; ஸ்கூட்டர் ஓட்டிய சிவகுமார்
ஹெப்பாலில் புதிய மேம்பாலம்; ஸ்கூட்டர் ஓட்டிய சிவகுமார்
ஹெப்பாலில் புதிய மேம்பாலம்; ஸ்கூட்டர் ஓட்டிய சிவகுமார்
ADDED : ஆக 05, 2025 11:59 PM

ஹெப்பால்: புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தில், துணை முதல்வர் சிவகுமார், ஸ்கூட்டர் ஓட்டி சென்று மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
பெங்களூரின், ஹெப்பால் அருகில் பி.டி.ஏ., சார்பில் புதிதாக மேம்பாலம் கட்டப்படுகிறது. இதை துணை முதல்வர் சிவகுமார், நேற்று காலை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஒப்பந்ததாரரிடம் பணிகள் குறித்து, தகவல் கேட்டறிந்தார்.
அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவரின் டியோ ஸ்கூட்டரை பார்த்த சிவகுமாருக்கு, அதை ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஸ்கூட்டரை தானே ஓட்டிக்கொண்டு, புதிய மேம்பாலத்தை ஒரு சுற்று சுற்றி வந்தார்.
அதன்பின் சாந்திநகர் காங்., எம்.எல்.ஏ., ஹாரிசும் ஸ்கூட்டரில், மேம்பாலத்தை சுற்றினார். சிவகுமார் ஹெல்மெட் அணிந்து, ஸ்கூட்டர் ஓட்டினார். ஆனால் ஹாரிஸ் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.
புதிய மேம்பாலம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட்டால், போக்குவரத்து நெருக்கடி குறையும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.