மாதவிடாய் விடுப்பு கொள்கை அமல்படுத்துவதில் தீவிரம்
மாதவிடாய் விடுப்பு கொள்கை அமல்படுத்துவதில் தீவிரம்
ADDED : ஏப் 18, 2026 06:02 AM

பெங்களூரு: கர்நாடகாவில் மாதவிடாய் விடுப்பு கொள்கையை அமல்படுத்துவதற்கான முயற்சியில், மாநில அரசு தீவிரமாக இறங்கி உள்ளதாக தொழிலாளர் நலன்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் அரசு, தனியர் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என, கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் அரசு உத்தரவு பிறப்பித்தது.
மாதவிடாய் விடுப்பு கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கையை மாநில அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இது குறித்து, தொழிலாளர் நலன்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது:
மாதவிடாய் கொள்கைக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் ஆதரவு தெரிவித்ததை வரவேற்கிறேன். நாட்டிலே முன்மாதிரியாக மாதவிடாய் கொள்கையை அமல்படுத்துவதற்கான முயற்சிகளில் மாநில அரசு இறங்கி உள்ளது. ஆண்டுக்கு, 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது மிகவும் அரிதான விஷயம். எனவே, மாதவிடாய் கொள்கையை விரைவில் மாநிலத்தில் அமல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
