sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சீக்ரெட் சிங்காரம்

 சீக்ரெட் சிங்காரம்

 சீக்ரெட் சிங்காரம்


ADDED : ஏப் 08, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:47 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணீருக்கு வெற்றி கிடைக்குமா?

கர்நாடக அரசியல்வாதிகளுக்கு எது நல்லா வருதோ இல்லையோ, கண்ணீர் விட நல்லாவே வரும். பாகல்கோட் தொகுதியில நடக்குற இடைத்தேர்தல்ல மேட்டி மகன் உமேஷ், கை கட்சி வேட்பாளர போட்டியிடுறாரு. அவருக்கு ஆதரவா பிரசாரம் பண்ணுற அக்கா, எங்க போனாலும் கண்ணீர சாரை, சாரையா வடிச்சி இருக்காங்க.

அப்பாவ போல தம்பிய எப்படியாவது ஜெயிக்க வச்சுருங்கன்னு உருகியும் இருக்காங்க. நாளைக்கு நடக்க போற தேர்தல்ல, மக்களோட ஒரு விரல் புரட்சி தான், கண்ணீருக்கு வெற்றி கிடைக்குமான்னு தீர்மானிக்க போகுது. தாமரை கட்சி வேட்பாளரோ இந்த நடிப்பெல்லாம் இங்க எடுபடாது, களத்துல இறங்கி வேலை செஞ்சு இருக்கேன். எனக்கு தான் வெற்றின்னு தெம்பா இருக்குறாரு.

பிரசாரத்துக்கு வராத எம்.எல்.ஏ.,

ஐ ந்து லட்சம் ரூபாய் கான்ட்ராக்டர்கிட்ட லஞ்சம் வாங்குன, தாமரை கட்சி எம்.எல்.ஏ., சிறைக்கு போனாரு. இப்போ ஜாமின்ல இருக்குற அவரு, அய்யா... சாமி... நான் எந்த தப்புமே பண்ணல. என்ன சிக்க வைச்சுடாங்கன்னு, கட்சி மேலிட தலைகள் கிட்ட புலம்பிட்டு வர்றாராம். அந்த எம்.எல்.ஏ., டாக்டர் வேற. 37 வயது இளைஞரான அவரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சேர்ந்தவரு.

இதனால, அவர இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு, கட்சி மேலிடம் பயன்படுத்த நினைச்சாங்க. நட்சத்திர பேச்சாளர் பட்டியல்லயும் எம்.எல்.ஏ., பெயரு இருந்துச்சு. அவரு கண்டிப்பாக வருவார்னு, கட்சிக்காரங்க நினைச்சாங்க. ஆனா எம்.எல்.ஏ.,வோ, பிரசாரம் பக்கமே தலை வைக்கல. கொஞ்சம் இருக்குற பேரயும் கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்குறாராம்.

புறக்கணிக்கப்பட்ட புல்லுக்கட்டு

க ர்நாடகாவுல தாமரையும், புல்லுக்கட்டும் கூட்டணியில தான் இருக்காங்க. ஆனா, எதுக்குமே புல்லுக்கட்ட சேர்க்காம, தாமரைகாரங்க ரொம்ப பவுசு காட்டுறாங்க. இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வாங்கன்னு, ஒரு வார்த்தைக்கு கூட கூப்புடலயாம்.

இதனால, தொட்ட கவுடரும், குமரண்ணரும் அப்செட் ஆயிட்டாங்க. இனி வேற வழியில்லன்னு வேண்டா வெறுப்பா கூப்புட்டு இருக்காங்க. ஒரு நாள் மட்டும் பிரசாரத்துக்கு வந்த குமரண்ணர், அப்புறம் வரவே இல்லை. புல்லுக்கட்டு கட்சியோட இளைஞர் அணி தலைவரும், பிரசார களம் பக்கமே வரல. கூட்டணின்னு சொல்லிட்டு எங்கள இப்படி புறக்கணிச்சா எப்படின்னு, தாமரை கட்சி மேல புல்லுக்கட்டு தொண்டர்களும் அதிருப்தியில இருக்குறாங்களாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us