/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சீனாவின் ஜி.பி.எஸ்., கருவியுடன் கடல் பறவை கார்வாரில் மீட்பு
/
சீனாவின் ஜி.பி.எஸ்., கருவியுடன் கடல் பறவை கார்வாரில் மீட்பு
சீனாவின் ஜி.பி.எஸ்., கருவியுடன் கடல் பறவை கார்வாரில் மீட்பு
சீனாவின் ஜி.பி.எஸ்., கருவியுடன் கடல் பறவை கார்வாரில் மீட்பு
ADDED : டிச 18, 2025 07:06 AM

கார்வார்: சீன நாட்டின் ஜி.பி.எஸ்., கருவி முதுகில் பொருத்தப்பட்ட நிலையில், கார்வார் கடம்பா கடற்படை தளத்தில், கடல் பறவை மீட்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான, ஐ.என்.எஸ்., கடம்பா கடற்படை தளம் உள்ளது.
இந்த கடற்படை தளத்தின் அருகே, நேற்று காலை, ஒரு கடல் பறவையை, கடற்படை தள ஊழியர்கள் பார்த்தனர்.
அந்த பறவையின் முதுகில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த கருவியில் சீனா அறிவியல் அகாடமியின் சுற்றுச்சூழல், சுற்றுச்சூழல் அறிவியல் என்று எழுதப்பட்டு இருந்தது. ஜி.பி.எஸ்., கருவியை பறிமுதல் செய்த கடற்படை அதிகாரிகள், அதில் என்ன தகவல்கள் உள்ளது என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
கார்வாரில் உள்ள கடல் வனவியல் பிரிவு அலுவலகத்திற்கு, கடல் பறவை கொண்டு செல்லப்பட்டு உள்ளது. சீனா அறிவியல் அகாடமியை, கடற்படை தள அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து வருகின்றனர்.
கடம்பா கடற்படை தளத்திற்குள் உள்ள பகுதிகளை மொபைல் போனில் படம் பிடித்து, வெளிநாடுகளுக்கு அனுப்பிய வழக்கில், கடற்படை தளத்தில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்கள் இருவரை, கடந்த பிப்ரவரி மாதம் என்.ஐ.ஏ., கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட கடல் பறவை மீட்கப்பட்டு இருப்பது, கடற்படை தளத்தை வெளிநாடுகள் வேவு பார்க்கின்றனவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

