sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பெங்களூரின் மேம்பாட்டு பணிகளுக்கு... ரூ.1,35,000 கோடி!: சுதந்திர தின விழாவில் சித்தராமையா பேச்சு

/

பெங்களூரின் மேம்பாட்டு பணிகளுக்கு... ரூ.1,35,000 கோடி!: சுதந்திர தின விழாவில் சித்தராமையா பேச்சு

பெங்களூரின் மேம்பாட்டு பணிகளுக்கு... ரூ.1,35,000 கோடி!: சுதந்திர தின விழாவில் சித்தராமையா பேச்சு

பெங்களூரின் மேம்பாட்டு பணிகளுக்கு... ரூ.1,35,000 கோடி!: சுதந்திர தின விழாவில் சித்தராமையா பேச்சு


ADDED : ஆக 15, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு மாநகராட்சி சார்பில், சிவாஜிநகர் கப்பன் ரோட்டில் உள்ள மானேக் ஷா அணிவகுப்பு மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியேற்ற, முதல்வர் சித்தராமையாவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை 8:57 மணிக்கு, மானேக் ஷா அணிவகுப்பு மைதான நுழைவு பகுதிக்கு, முதல்வர் காரில் வந்தார்.

அங்கிருந்து அவரை மைதானத்திற்குள் குதிரைப் படையினர் அழைத்துச் சென்றனர். காலை 8:59 மணிக்கு தேசியக் கொடியை முதல்வர் ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். பின், திறந்த ஜீப்பில் சென்று போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பஹல்காம் தாக்குதல் விழா மேடைக்கு வந்த அவர், சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக மக்களுக்கு உரை ஆற்றினார். அவர் பேசியதாவது:

நமது நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, கர்நாடக மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நமக்கு சுதந்திரம் கிடைக்க கடுமையாக போராடிய மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், சுபாஸ் சந்திர போஸ், பகத் சிங் உள்ளிட்டவர்களை, இந்த நாளில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு தலை வணங்குவோம்.

சுதந்திரப் போராட்டத்தில் கர்நாடகாவும் முன்னணியில் இருந்தது. கித்துார் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா உள்ளிட்டோரின் போராட்டங்கள் ஆங்கிலேயரை உலுக்கின.

சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களையும், இந்த நேரத்தில் நாம் நினைவுகூருவோம். சொல்வதை செய்ய வேண்டும் என்ற பசவண்ணரின் கொள்கையை கடைப்பிடித்து ஆட்சி நடத்துகிறோம்.

ஐ.நா., பாராட்டு கர்நாடகாவின் ஐந்து வாக்குறுதி திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பிலிமோன் யங் பாராட்டி உள்ளார். உலகளவில் நமது வாக்குறுதிகள் அங்கீரிக்கப்பட்டுள்ளன.

வாக்குறுதி திட்டங்களுக்காக இதுவரை 96,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். தனிநபர் வருமானத்தில் நம் மாநிலம் முதலிடத்தில் இருப் பது பெருமை அளிக்கிறது.

எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை கையாள, சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரக அதிகாரத்தின் கீழ் 33 சிறப்பு போலீஸ் நிலையம் துவங்கப்பட்டு உள்ளது.

பெங்களூரை தவிர்த்து மற்ற நகரங்களில் வளர்ச்சிக்காக 16,508 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு நகரின் மேம்பாட்டிற்காக ஈரடுக்கு மேம்பாலம், சுரங்கபாதை, ஆறாவது கட்ட காவிரி குடிநீர் திட்டம், புதிய மெட்ரோ பாதைகள், ஒயிட் டாப்பிங் சாலை, போக்குவரத்து மேலாண்மை, விளையாட்டு மைதானங்கள் உட்பட பல திட்டங்கள் 1,35,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளன. விவசாயி மகன் விஞ்ஞானியாக மாற வேண்டும்.

நெசவாளர் மகன் தொழில் முனைவோராக வேண்டும் என்பது எங்கள் அரசு கொள்கை. இதற்கான சூழலை உருவாக்கி வருகிறோம். குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயிரி தொழில்நுட்பத்தில் கர்நாடக முன்னணியில் உள்ளது.

இளம் தலைமுறையினர் மொபைல் போன், இணையத் தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் மனச்சோர்வு, பதற்றம், கோபம், வெறுப்பு போ ன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.இதை கட்டுப்படுத்த 'மொபைல் போன கீழே வைக்கவும், புத்தகத்தை எடுக்கவும்' என்ற திட்டத்தை துவங்க உள்ளோம்.

கர்நாடகாவை நக்சல் இல்லாத மாநிலமாக அறிவித்துள்ளோம். இதுபோல போதைப்பொருள் பயன்பாடு இல்லாத மாநிலமாக, கர்நாடகாவை அறிவிக்க மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்.

ஒருங்கிணைந்து குரல் வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் ஜனநாயகம், அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது என்ற கருத்துகள் மக்கள் மன்றத்தில் இருந்து வெளிப்படுகிறது. பொறுப்புள்ள அனைத்து குடிமக்களும் ஒன்றாக இணைந்து குரல் எழுப்ப வேண்டும். மாநிலத்தை அமைதி பூங்காவாக வைத்திருப்பது நாம் அனைவரின் பொறுப்பு.

இணக்கமான, வளமான கர்நாடகாவை உருவாக்குதன் மூலம், வலுவான இந்தியாவை உருவாக்க முடியும். சுதந்திரம், அரசியலமைப்பு, ஜனநாயகத்தை உயிரை விட முக்கியமானதாக கருத வேண்டும்.

சமூக, பொருளாதார, அரசியல் சுதந்திரம், நீதியை தொடர்ந்து பாதுகாப்பதாக உறுதிமொழி எடுப்பதன் மூலம், இந்த சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின், கர்நாடக போலீஸ் துறையின் 50வது ஆண்டை நினைவுகூரும் வகையில், தபால் தலையை சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், தலைமை செயலர் ஷாலினி, டி.ஜி.பி., சலீம், பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

மேலும் படங்கள் உள்ளே

38 நிமிட உரை

சுதந்திர தின வாழ்த்துத் தெரிவித்து, காலை 9:07 மணிக்கு பேச ஆரம்பித்த சித்தராமையா 9:45 மணிக்கு தன் உரையை முடித்தார். 38 நிமிடங்கள் முதல்வர் உரையாற்றினார். முதல்வர் உரையாற்றிய விழா மேடையில், குண்டு துளைக்காத கண்ணாடி பேழை வைக்கப்பட்டு இருந்தது. அதை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.








      Dinamalar
      Follow us