/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கார் விபத்தில் தப்பிய ராகவேந்திரா எம்.பி.,
/
கார் விபத்தில் தப்பிய ராகவேந்திரா எம்.பி.,
ADDED : ஜன 22, 2026 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷிவமொக்கா: பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா பயணித்த கார் மீது, வேறொரு கார் மோதியதில், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி.,யுமான ராகவேந்திரா, நேற்று மதியம், ஷிவமொக்காவின், குன்சேனஹள்ளி கிராமம் வழியாக, காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பொலிரோ வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எம்.பி.,யின் கார் மீது மோதியது.
இதில் எம்.பி., ராகவேந்திராவும், ஊழியரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இவர்கள் சென்ற காரின் பின் புற லைட்டுகள் நொறுங்கின. சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டனர்.

