sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 எண்ணிக்கையோ குறைவு... தரமோ நிறைவு! 'புத்தகங்களுடன் பயணிக்கும்' அக் ஷயா மோகன்

/

 எண்ணிக்கையோ குறைவு... தரமோ நிறைவு! 'புத்தகங்களுடன் பயணிக்கும்' அக் ஷயா மோகன்

 எண்ணிக்கையோ குறைவு... தரமோ நிறைவு! 'புத்தகங்களுடன் பயணிக்கும்' அக் ஷயா மோகன்

 எண்ணிக்கையோ குறைவு... தரமோ நிறைவு! 'புத்தகங்களுடன் பயணிக்கும்' அக் ஷயா மோகன்


ADDED : டிச 12, 2025 06:53 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: புத்தக திருவிழா என்பது அனைத்து புத்தகங்களும் சங்கமிக்கும் இடம். இங்கு பாகுபாடு என்பதற்கு இடம் கிடையாது. அனைத்து மத நுால்களையும் அருகருகே வைத்து கொண்டாலும், அவை ஒரு போதும் அடித்து கொள்வதில்லை. அப்படிப்பட்ட ஒரு புனித பூமி தான் புத்தக திருவிழா.

பழுத்த எழுத்தாளர் முதல் புதுமுக எழுத்தாளர் வரை என ஏராளமானோரின் படைப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட புத்தக உலகின் புதிதாக பிறந்த குழந்தையான 'லிட்கண்மணி' பதிப்பகமும் அரங்கில் உள்ளது. இந்த அரங்கிற்கு அழகு சேர்க்கும் வகையில், ஆங்கில புத்தகங்களின் அட்டைகள் மினுமினுப்பாக காட்சி அளிக்கின்றன.

துவக்கம் இந்த பதிப்பகத்தின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான அக் ஷயா மோகனும், 28, அரங்கில் வரும் புத்தக பிரியர்களை தன் இன்முகத்துடன் வரவேற்கிறார். இவரின் புன்னகை கலந்த வணக்கத்திற்கு பின்னரே, வாசிப்பாளர்கள் புத்தகங்களை நோக்குகின்றனர்.

'லிட்கண்மணி' பதிப்பகம் 2021 ல் துவங்கப்பட்டது. 'வெயிட்டிங் பார் பாதர்', 'பூட் பிரின்ட்ஸ்', 'ஷூஸ் பார் மேன் அன்ட் பீஷ்ட்ஸ்', 'தி லிட்கண்மணி அந்தாலஜி' என நான்கு ஆங்கில புத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்கள் அனைத்தும் இளம் வயதினருக்காக எழுதப்பட்டவை என்பது மற்றொரு சிறப்பு. இளம் வாசகர்களை உருவாக்குவது கடினம். அந்த வேலையை லிட்கண்மணி செய்ய முடிவெடுத்து, புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.

புத்தகங்கள் எண்ணிக்கை குறைவாக வெளியிட்டாலும், அந்த புத்தகங்களின் தரத்தில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதையே நோக்கமாக வைத்து உள்ளனர்.

புத்தகத்தின் தரம் குறித்தும், தன் வாழ்க்கை குறித்தும் 'லிட்கண்மணி' பதிப்பகத்தின் அக் ஷயா மோகன் கூறியதாவது:

எனது பதிப்பகத்தில் வெளியாகும் புத்தகங்கள் இளம் வயதினரை குறிவைத்தே வெளியிடப்படுகிறது. பிக் ஷன் எனும் கற்பனை கதைகளை மையப்படுத்தி வெளியிடப்படுகிறது. என் குழுவில் வேலை பார்ப்பவர்கள், அனைவரும் பெண்களே.

இளைஞர்கள் மொபைல் போன் அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த மொபைல் போனிலும் புத்தகங்களை படிக்கலாம் என்பதை யாரும் மறக்க வேண்டாம். நல்ல புத்தகம் எப்படியாவது ஒரு வாசகரை படிக்க வைத்து விடும். இன்றைக்கும் வாசகர்கள் படித்து கொண்டே தான் இருக்கின்றனர்.

தமிழ் பிடிக்கும் இதில், வயதுக்கு எந்த தடையும் இல்லை. எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். தமிழில் உள்ள கண்மணி என்ற வார்த்தை மீது ஈர்ப்பு அதிகம். அதனால், லிட்கண்மணி என பெயர் வைத்தேன். தமிழகத்துக்கு செல்லும் போது, அங்குள்ள பெயர் பலகைகளை படித்தே தமிழை கற்று கொண்டேன். உதாரணத்திற்கு, 'தினமலர்' என எழுதப்பட்ட பெயர் பலகையை எழுத்து கூட்டி படித்து, தமிழை படிக்க கற்று கொண்டேன்.

என் வீட்டுப்பகுதியில் சிறிய நுாலகம் வைத்து உள்ளேன். இந்த நுாலகத்தில் மாதம் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி புத்தகங்களை படித்து கொள்ளலாம். மாணவர்கள் மாதம் 50 ரூபாய் செலுத்தினால் போதும். வாசகர்களின் அறிவுப்பசியை போக்க போராடுவேன். தி லிட்கண்மணி அந்தாலஜி எனும் நுாலை, நான் தான் எடிட் செய்து உள்ளேன். பத்து சிறுகதைகளின் தொகுப்பு.

எனது மொத்த உழைப்பையும் போட்டு புத்தகங்களை வெளியிடுகிறேன். என் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். எனது பதிப்பகத்தின் புத்தகங்கள் வாசகர்களுக்கு ஏமாற்றத்தை தராது. எண்ணிக்கை முக்கியமல்லை; தரம் தான் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us