/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
ADDED : டிச 31, 2025 07:11 AM

பெங்களூரு: பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முக்கிய பகுதிகளை போலீசார், கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, பெங்களூரு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெரு, கோரமங்களா, இந்திராநகர் பகுதிகளில் கொண்டாட்டங்கள் அரங்கேறும். பப், பார்களில் குவிந்து இளம் தலைமுறையினர் ஆட்டம், பாட்டத்துடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.
நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், வழக்கமான கொண்டாட்டங்கள் அரங்கேறும் பகுதிகளில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூளை முடுக்கெல்லாம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் கோப்பையை வென்றதை கொண்டாடும் போது, கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர்.
இதனை கருத்தில் கொண்டு, மக்கள் அதிகம் கூடும் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
நகரில் உள்ள பள்ளிகள், அலுவலகங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால், நகரில் உள்ள முக்கிய பகுதிகளை போலீசார் தங்கள், கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர்.

