/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'யு டியூபர்' வெளியிட்ட வீடியோவால் மருந்தக பொறுப்பாளர் தற்கொலை
/
'யு டியூபர்' வெளியிட்ட வீடியோவால் மருந்தக பொறுப்பாளர் தற்கொலை
'யு டியூபர்' வெளியிட்ட வீடியோவால் மருந்தக பொறுப்பாளர் தற்கொலை
'யு டியூபர்' வெளியிட்ட வீடியோவால் மருந்தக பொறுப்பாளர் தற்கொலை
ADDED : ஜன 24, 2026 05:23 AM

கார்வார்: காலாவதியான மாத்திரையை வழங்கியதாக கூறி, யூ - டியூபர் வெளியிட்ட வீடியோவால், மருந்தக பொறுப்பாளர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர கன்னடா அங்கோலா ஹட்டிகேரியில், பிகாலே என்ற குடும்பம், 30 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்கிறது. இதற்காக அந்த குடும்பத்திற்கு பல விருதுகளும் கிடைத்து உள்ளன. இந்த குடும்பம் கார்வாரில் மருந்தகம் நடத்துகிறது.
பிகாலே குடும்பத்தின் ராஜிவ், 55 என்பவர், மருந்தக பொறுப்பாளராக உள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மருந்தகத்திற்கு வந்த யூ - டியூபர் ஒருவர் தலைவலிக்காக, ராஜிவிடம் இருந்து மாத்திரை வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்த போது, மாத்திரை காலாவதியானது தெரியவந்தது. இதுபற்றி, யூ - டியூபர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார்.
வீடியோ வேகமாக பரவிய நிலையில், கவனக்குறைவால் காலாவதியான மாத்திரை வழங்கியதாக ராஜிவும் விளக்கம் அளித்தார்.
ஆனாலும், தன் கவனக்குறைவால், பிகாலே குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதே என்ற மனவருத்தத்தில் இருந்த அவர், நேற்று காலை வீட்டில் இருந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்து, தனது நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு யூ - டியூபர் தான் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். விசாரணை நடக்கிறது.

