/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீஸ் காலியிடங்கள் நிரப்ப பரமேஸ்வர் உறுதி
/
போலீஸ் காலியிடங்கள் நிரப்ப பரமேஸ்வர் உறுதி
ADDED : நவ 27, 2025 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயபுரா: “மாநிலத்தில் காலியாக உள்ள, 600 எஸ்.ஐ., மற்றும் 4,500 ஏட்டுகள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,” என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் காலியாக உள்ள, 600 எஸ்.ஐ., மற்றும் 4,500 ஏட்டுகளின் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 15,000 ஏட்டுகள் காலியாக உள்ளன. இவற்றையும் படிப்படியாக நிரப்புவோம்.
கடந்த ஆண்டுகளாகவே, காலி பணியிடங்களை நிரப்ப முயற்சிக்கிறோம். ஆனால், உள் இடஒதுக்கீடு விஷயத்தில் ஓரளவு தாமதமானது. பிரச்னைகளை சரி செய்து, நியமனத்தை துவக்குவோம். இவ்வாறு கூறினார்.

