/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்; உணவகத்தில் புகுந்ததால் பரபரப்பு
/
கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்; உணவகத்தில் புகுந்ததால் பரபரப்பு
கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்; உணவகத்தில் புகுந்ததால் பரபரப்பு
கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்; உணவகத்தில் புகுந்ததால் பரபரப்பு
ADDED : ஜன 06, 2026 06:08 AM
பெலகாவி: பைலஹொங்களா நகரில், சாலையோர உணவகத்திற்குள் டிராக்டர் புகுந்ததால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பெலகாவி மாவட்டம் பைலஹொங்களா தாலுகாவின் சாயி மந்திர் அருகே, சாலையோர உணவகம் உள்ளது. நேற்று காலை உணவகத்தில் வாடிக்கையாளர்கள் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த டிராக்டர், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, குறுக்கும், நெடுக்குமாக ஓடி, சாலை ஓரமிருந்த இந்த உணவகத்துக்குள் புகுந்தது.
அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக ஊழியர்கள் தாமதிக்காமல் வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனால், உணவகத்தில் இருந்த மேஜைகள், இருக்கைகள் உட்பட பல பொருட்கள் சேதமடைந்தன. மேஜை மீதிருந்த உணவும் பாழானது. இந்த சம்பவத்தால், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
உணவகத்துக்குள் டிராக்டர் புகுந்ததால், சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தகவலறிந்து அங்கு வந்த பைலஹொங்களா போலீசார், டிராக்டர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்துகின்றனர்.