/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு
/
வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு
ADDED : ஜன 27, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடக அரசு வகுத்துள்ள வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு, ஏற்கனவே ஹிந்து அமைப்பினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இம்மசோதா, கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே விஸ்வ ஹிந்து பரிஷத் கர்நாடக நிர்வாகிகள், நேற்று கவர்னரை சந்தித்து, 'இந்த மசோதா அரசியல் அமைப்புக்கு எதிரானது.
உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, மசோதாவை தடுக்க வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தனர்.

