ADDED : ஏப் 08, 2026 04:40 AM

அ நிறம் | அளவு
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்., புரா தாலுகா முட்டினகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ரன்யா பேசில், 30. இவர் ஷிவமொக்காவில் உள்ள புகழ்பெற்ற, 'நாராயண ஹிருதாலயா' மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ரன்யா நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு, ஷிவமொக்காவில் இருந்து முட்டினகொப்பாவில் உள்ள தன் வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு திரும்பிய சிறிது நேரத்திலேயே மீண்டும் வீட்டிலிருந்து வெளியே சென்றார். சிக்கமகளூரின் முடுபா அருகே உள்ள பாலத்தில் இருந்து பத்ரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இ வரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. என்.ஆர்., புரா போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
