/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எங்களை எதுவும் செய்ய முடியாது! காங்., - எம்.எல்.ஏ., 'இறுமாப்பு'
/
எங்களை எதுவும் செய்ய முடியாது! காங்., - எம்.எல்.ஏ., 'இறுமாப்பு'
எங்களை எதுவும் செய்ய முடியாது! காங்., - எம்.எல்.ஏ., 'இறுமாப்பு'
எங்களை எதுவும் செய்ய முடியாது! காங்., - எம்.எல்.ஏ., 'இறுமாப்பு'
ADDED : மார் 29, 2025 05:29 AM

மைசூரு : ''காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 140 பேர் முன், ம.ஜ.த.,வின் 19 எம்.எல்.ஏ.,க்களால் எதுவும் செய்ய முடியாது,'' என, காங்., - எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் கூறி உள்ளார்.
மைசூரில் நேற்று நரசிம்மராஜா தொகுதி காங்., - எம்.எல்.ஏ., தன்வீர் சேட் அளித்த பேட்டி:
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 140 பேர் முன், வெறும் 19 ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களால் எதுவும் செய்ய முடியாது. எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அரசு அமைகிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
மத்திய அமைச்சர் குமாரசாமியை சந்தித்து பேசியது குறித்து, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி விளக்கம் அளிக்க வேண்டும். அரசியலில் யார், யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அந்த சந்திப்பில் பேசப்படும் விஷயங்களே முக்கியத்துவம் வாய்ந்தவை.
குமாரசாமி - சதீஷ் இருவரின் சந்திப்பு குறித்து பேசப்படும் அரசியல் என்பது வெறும் ஊகங்களே. இதனால், அதுபற்றி கவலைப்பட தேவையில்லை.
அனைத்து அரசியல்வாதிகளுடனான என் உறவு நன்றாக உள்ளது. மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஹனி டிராப் விஷயத்திற்கும் பொது மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விஷயத்தில் நான் பதில் அளிக்க விரும்பவில்லை.
அரசியல் உள்நோக்கத்துடன் பேசினால் அது விவாத பொருளாக மாறுகிறது. அரசியலில் சேவை செய்யும் நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும். என் வாழ்நாள் முழுதும் மக்களுக்கு சேவை செய்வதையே விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

