sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நாளிதழ் விநியோகிப்பாளர்கள் தினம் கட்டுரை

நாளிதழ் விநியோகிப்பாளர்கள் தினம் கட்டுரை

நாளிதழ் விநியோகிப்பாளர்கள் தினம் கட்டுரை


ADDED : செப் 04, 2025 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 03:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரியன் எட்டிப் பார்ப்பதற்கு முன்னரே எழுந்து, நாளிதழ் விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு நாளும் பணியாற்றி வருகின்றனர்.

மழை, குளிர், காற்று என, எதை பற்றியும் கவலைப்படாமல், எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்ட போதும், நாளிதழ் விநியோகிப்பதை நிறுத்துவதில்லை.

கொரோனாவுக்காக உலகமே அஞ்சி, வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த காலத்திலும் கூட, தங்கள் தொழிலை மறக்கவில்லை. கொரோனா ஊரடங்கின்போது, நாளிதழ் விநியோகஸ்தர்கள் போர் வீரர்களை போன்று, தங்கள் கடமையை செய்தனர். வழக்கம் போல் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே சென்று நாளிதழை விநியோகித்து வந்தனர்.

ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமலும், நல்லது, கெட்டதுக்கு செல்ல வேண்டுமானாலும் கூட, காலை நாளிதழ்களை விநியோகித்த பின்னரே செல்வர்.

நாட்டிற்கு விவசாயிகள் எப்படி முதுகெலும்பாக உள்ளனரோ, நாட்டின் நான்காவது துாணாக உள்ள பத்திரிகைகளுக்கும் 'முதுகெலும்பாக' உள்ளனர்.

தாமஸ் ஆல்வா எடிசன், வால்ட் டிஸ்னி, மார்ட்டின் லுாதர் கிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உட்பட பல சாதனையாளர்களும் தங்கள் சிறு வயதில் நாளிதழ் விநியோகித்துள்ளனர்.

அறிவை வளர்க்கும் நாளிதழ்களை விநியோகிக்கும் இவர்களின் பணியை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் செப்., 4ம் தேதி 'நாளிதழ் விநியோகிப்பவர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

மழை, குளிரிலும் தொடரும் பணி

நவ்ரங் ஏஜென்ட் - ரவீந்திரநாத், 59.

நான் பி.யு., 2ம் ஆண்டு படிக்கும்போது, 18 வயதில், 1980ல், 'நாளிதழ் பாயாக' பணியில் சேர்ந்தேன். ஓராண்டுக்கு பின், நவ்ரங் ஏஜென்ட் ஆனேன். அதிகாலை 4:00 மணிக்கு நாளிதழ் பாயின்டுக்கு சென்றுவிடுவேன். என் தந்தை எனக்காக சைக்கிள் வாங்கி கொடுத்தார். மழையோ, குளிரோ என எதை பற்றியும் கவலைப்படாமல் சைக்கிளில் நாளிதழ்களை விநியோகித்து வந்தேன். என்னிடம் நாளிதழ் பாயாக பணியாற்றி வந்தவர்கள் சிலர் திடீரென விடுமுறை எடுத்து விடுவர். அந்த லைனுக்கு, நானே சைக்கிளில் சென்று விநியோகிப்பேன். கடந்த 45 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறன். நாங்கள் ஊருக்கு செல்லும் போது, என் மகன், நாளிதழ் விநியோகிக்கும் பணியை கவனித்து வருகிறார். நாளிதழ் பணி தவிர, புரொவிஷன் ஸ்டோர்ஸ் எனும் பலசரக்கு கடை நடத்தி வந்தேன். நாளிதழ் விநியோகஸ்தர்களின் வயதான காலத்தில், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும்.

நாளிதழ் விநியோகிப்பதில் பெருமை

எலஹங்கா --- வீரபத்ரா, 47.

நாளிதழ் விநியோகிக்கும் பணியில், 1991 முதல் ஈடுபட்டு வருகிறேன். இந்த வருமானத்தில் தான், பி.யு.சி., - ஐ.டி.ஐ., டெக்னிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். தற்போது நான் நன்றாக இருப்பதற்கு நாளிதழ் விநியோகஸ்தராக பணியாற்றியதே காரணம். தற்போது தினமும் 35,000 நாளிதழ்கள் விற்பனை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு நாளிதழுக்கு 30 பைசா கமிஷன் கிடைத்தது. ஆண்டுகள் செல்லச்செல்ல படிப்பவர்கள் அதிகமாகினர். நாளிதழ் நிறுவனங்களும் அதிகரித்தன. கமிஷன் தொகையும் அதிகரித்தது. என் மொபைல் போனில் 4,000 பேரின் எண்கள் உள்ளன. தினமும் காலை இவர்களின் வீடு, கடைகள், அலுவலகங்களில் நாளிதழ் சப்ளை செய்கிறோம். என்னிடம் விற்பனையாகும் பத்திரிகைகள் அனைத்தும், என் இரு மகன்களுக்கு தெரியும். சிறு வயதில் இருந்தே நாளிதழ் விநியோகிக்கும் பணி சுலபமானது அல்ல என்பதை மகன்களுக்கு உணர்த்தி உள்ளேன். இப்போது அவர்களாகவே இப்பணியை செய்கின்றனர். படிப்பு முக்கியம் என்பதால் அதில் கவனம் செலுத்த கூறியுள்ளேன். படிப்புடன் இப்பணியையும் செய்து வருகின்றனர்.

'ஒன் மேன் ஆர்மி'

மல்லேஸ்வரம் - ரகுராம், 58.

ஹாசன் மாவட்டம், ஹாசன் தாலுகாவில் ஏழை குடும்பத்தில் பிறந்தேன். அங்கு எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தேன். அதன் பின், பெங்களூரு வந்தேன். இங்கு மெஜஸ்டிக்கில் நாளிதழ் விநியோகஸ்தர் குப்தாவிடம் 'பீட் பாய்' எனும் நாளிதழ் சப்ளையராக பணியாற்றினேன். கர்நாடகாவில் நாளிதழ் விநியோகிப்பதில் குப்தா தான் 'டாப்' ஆக இருந்தார். நான், 1986 முதல் 1996 வரை பீட் பாயாகவும்; 1996 முதல் 2004 வரை சப் ஏஜென்டாகவும் இருந்தேன். 2004 நாளிதழ் ஏஜென்சியை குப்தா விட்டுவிட்டார். அதன் பின், நாளிதழ் நிறுவனங்கள், என்னிடம் ஏஜென்சி கொடுத்தனர். கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு நாளிதழ் பாயின்டுக்கு சென்றுவிடுவேன். தற்போது பீட் பாயாக, மாணவர்கள் மட்டுமின்றி, வயதானவர்களும் பணியாற்றுகின்றனர். 'ஒன் மேன் ஆர்மி' என்று சொன்னால் மிகையாகாது. அரசு, எங்களுக்கு விபத்து காப்பீடு மட்டுமின்றி, வாழ்நாள் முழுதும் இன்சூரன்ஸ் செய்து தர வேண்டும்.

வீட்டுக்கு 'பத்திரிகை நிவாஸ்' பெயர்

டி.தாசரஹள்ளி - கிருஷ்ணமூர்த்தி, 60.

கடந்த 35 ஆண்டுகளாக நாளிதழ் விநியோகிக்கும் பணியில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டுள்ளேன். ஆரம்பத்தில் என் தாய் மாமாவிடம் 1992ல் பணியாற்றி வந்தேன். ஆரம்பத்தில் நாளிதழ் கமிஷன் குறைவு, ஊதியமும் குறைவு. அப்போது, வெகு தொலைவில் உள்ள வீடுகளுக்கு சைக்கிளில் சென்று விநியோகித்து வந்தேன். ஏஜென்டாக மாறிய பின், பத்திரிகை நிறுவனங்கள், கமிஷன் தொகையை அதிகரித்தது. என்னிடம் 30க்கும் மேற்பட்டவர்கள் நாளிதழ் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது ஒரு நாளைக்கு 12,000 நாளிதழ்கள் விநியோகித்து வருகிறோம். நாளிதழ் பாய்கள், சிலர் சைக்களிலும், சிலர் இரு சக்கர வாகனத்தில் சென்று நாளிதழ் விநியோகித்து வருகின்றனர். தற்போது ரியல் எஸ்டேட் தொழிலுடன், நாளிதழ் விநியோகித்து வருகிறன். டி.தாசரஹள்ளியில் எனது வீட்டுக்கு 'பத்திரிகை நிவாஸ்' என்று பெயர் சூட்டி உள்ளேன். பள்ளி, கல்லுாரியில் படிக்கும் மாணவர்களே நாளிதழ் விநியோகிப்பவர்களாக உள்ளனர். ஏழை குடும்பத்தினர், தங்கள் படிப்புக்காகவும், குடும்பத்தின் வருமானத்துக்காகவும் பணி செய்கின்றனர். அதிகாலை நாளிதழ் விநியோகிக்கும் போது ஏதாவது அசம்பாவிதத்தால், அவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us