/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதிய 'லே - அவுட்': பி.டி.ஏ., திட்டம்
/
புதிய 'லே - அவுட்': பி.டி.ஏ., திட்டம்
ADDED : ஆக 30, 2025 03:22 AM
பெங்களூரு: பெங்களூரில் பல்வேறு இடங்களில், புதிதாக ஆறு லே - அவுட்கள் அமைக்க, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, பி.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
ஓசூர் சாலையில் இருந்து, பன்னரகட்டா சாலை, கனகபுரா சாலை வழியாக, மைசூரு சாலை வரை புதிதாக ஆறு லே - அவுட்டுகள் அமைக்க, திட்டம் வகுத்துள்ளோம். லே - அவுட்டுக்காக 6,217 நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
இதற்கு மாநில அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய லே - அவுட்களுக்காக, மாரகொண்டனஹள்ளி, ஹுலிமங்களா, பெட்டதாசனபுரா உட்பட 22 கிராமங்களில் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
புதிய லே - அவுட்களில் 50,000க்கும் மேற்பட்ட மனைகள் மேம்படுத்தப்படவுள்ளன. லே - அவுட்களில் இணைப்பு சாலைகள், வர்த்தக மையங்களும் அமைக்கப்படும்.
கெம்பே கவுடா லே - அவுட், சிவராம் காரந்த் லே - அவுட்களில் நடந்த தவறுகள், புதிய லே - அவுட்களில் நடக்காமல், எச்சரிக்கையாக இருப்போம்.
மக்களுக்கு குறைந்த விலையில், மனைகளை வழங்க வேண்டும் என்பது, பி.டி.ஏ.,வின் குறிக்கோளாகும்.
சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படும். லே - அவுட் அமைக்கும் திட்டத்துக்கு நிலம் விட்டுக்கொடுக்கும் உரிமையாளர்களுக்கு, பணமோ அல்லது மேம்படுத்தப்பட்ட மனைகளோ வழங்கப்படும்.
நில உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்காமல், அவர்கள் மனதை கரைத்து நிலம் கையகப்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

