/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நன்றி மறந்த நாராயணசாமி'; அமைச்சர் போசராஜு ஆதங்கம்
/
'நன்றி மறந்த நாராயணசாமி'; அமைச்சர் போசராஜு ஆதங்கம்
'நன்றி மறந்த நாராயணசாமி'; அமைச்சர் போசராஜு ஆதங்கம்
'நன்றி மறந்த நாராயணசாமி'; அமைச்சர் போசராஜு ஆதங்கம்
ADDED : அக் 27, 2025 03:39 AM

ராய்ச்சூர்: ''மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமியை, அரசியல்ரீதியாக வளர்த்து விட்டதில், மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்திற்கு பங்கு உள்ளது. அதை மறந்து அவர் நன்றி மறந்து பேசுகிறார்,'' என்று, சிறிய நீர்பாசன அமைச்சர் போசராஜு ஆதங்கம் வெளிப்படுத்தி உள்ளார்.
ராய்ச்சூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமிக்கு, தனது பதவிக்கு ஏற்ப பேச தெரியவில்லை. ஏதோ வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவரை, அரசியல் ரீதியாக வளர்த்து விட்டதில் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்திற்கு பங்கு உள்ளது.
தான் ஏறிய ஏணியை உதைக்கும் மனநிலை கொண்ட அவரை, எஸ்.சி., சமூக மக்கள் நம்ப கூடாது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை முன்நிறுத்தி அரசியல் லாபம் தேடுகிறார். அமைச்சர் பிரியங்க் கார்கே, எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த நிறைய பேரை கான்ட்ராக்டர்களாக மாற்றி உள்ளார். அச்சமூ க மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். நாராயணசாமியால், எஸ்.சி., சமூக மக்களுக்கு என்ன நடந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சலவாதி நாராயணசாமி

