தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோ பால்ஸ் அமைப்பின் 'நந்தி பூஜை' கோலாகலம்

 கோ பால்ஸ் அமைப்பின் 'நந்தி பூஜை' கோலாகலம்

 கோ பால்ஸ் அமைப்பின் 'நந்தி பூஜை' கோலாகலம்


ADDED : பிப் 17, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'கோ பால்ஸ்' அமைப்பு சார்பில், 'பாரதிய நந்தி பூஜை உத்சவம்' நடந்தது.

நாட்டு மாடுகளை பாதுகாக்கும், கோ பால்ஸ் அமைப்பு சார்பில், மஹா சிவராத்திரியை ஒட்டி, 'பாரதிய நந்தி பூஜை உத்சவம்' நேற்று முன்தினம் நடந்தது. கர்நாடகாவில், 100க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்த இப்பூஜையில், பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

தமிழகம் தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, 'நந்தி பூஜை வெறும் ஆன்மிக சடங்காக மட்டுமின்றி, இந்திய விவசாயத்தின் உயிர்நாடியை மீட்டெடுக்கும் ஒரு மாபெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

'நவீன தொழில்நுட்பம் ஒரு கை என்றால், நமது பாரம்பரியம் மறு கை' என்று சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும், 300 முதல் 500-க்கும் மேற்பட்ட இடங்களில், பண்ணைகள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இப்பூஜையை நடத்தின.

பஞ்ச-சூத்ரா இயக்கத்தின் அடிப்படை மந்திரமாக விளங்கும், 'நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துதல்; ரசாயனமற்ற இயற்கை உணவை ஆதரித்தல்; 'பூர்வீகக் கால்நடைகளை பாதுகாத்தல்; அடுத்த தலைமுறைக்கு இந்த மரபை கொண்டு செல்லுதல்; இயற்கையோடு இணைந்த வாழ்வியலை தழுவுதல்' ஆகிய ஐந்து கொள்கைகளை கோ பால்ஸ் குறிக்கோளாக கொண்டுள்ளது.

மேலும் விபரங்களை: www.wegopals.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us