ADDED : ஏப் 06, 2026 04:43 AM

மைசூரு: கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், மைசூரு - ஜோத்பூர் இடையில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தென்மேற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
கோடைக்கால கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், மைசூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வரும் 13, 20, 27ம் தேதிகளில், திங்கட்கிழமைகளில் மைசூரில் இருந்து இரவு 8:15 மணிக்கு புறப்படும் ரயில் - 06273, 15, 22, 29ம் தேதிகளில் மாலை 5:00 மணிக்கு ஜோத்பூர் செல்லும்.
மறுமார்க்கமாக ஜோத்பூரில் இருந்து 16, 23, 30ம் தேதிகளில் வியாழக் கிழமையன்று புறப்படும் ரயில் - 06274 18, 25, 2 ம் தேதிகளில் மைசூருக்கு வரும். இந்த ரயில் இருமார்க்கமாகவும் கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், துமகூரு, திப்டூர், அரிசிகெரே, பீரூர், தாவணகெரே, ஹரிஹரா, ராணிபென்னுார், ஹாவேரி, ஹுப்பள்ளி, தார்வாட், லோண்டா, பெலகாவி, கட்டபிரபா, மிரஜ், சாங்கிலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
