sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்., சார்பில் முஸ்லிம் வேட்பாளர்?

/

 தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்., சார்பில் முஸ்லிம் வேட்பாளர்?

 தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்., சார்பில் முஸ்லிம் வேட்பாளர்?

 தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்., சார்பில் முஸ்லிம் வேட்பாளர்?


ADDED : ஜன 23, 2026 06:00 AM

Google News

ADDED : ஜன 23, 2026 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: சாமனுார் சிவசங்கரப்பா மறைவால் காலியான, தாவணகெரே தெற்கு தொகுதியில், முஸ்லிம் வேட்பாளருக்கு சீட் கொடுக்கும்படி, வலியுறுத்தல் எழுந்துள்ளது.

கடந்த 2008 முதல், 2023 வரை, தாவணகெரே தெற்கு தொகுதியில், தொடர்ச்சியாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானவர் சாமனுார் சிவசங்கரப்பா. இந்த தொகுதியை காங்கிரஸ் பாதுகாப்பு கோட்டையாக மாற்றினார். கட்சி பாகுபாடின்றி இவருக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.

கடந்த டிசம்பரில் சிவசங்கரப்பா காலமானதால், தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கே சீட் கிடைக்கலாம் என, கூறப்பட்டது.

ஆனால் இத்தொகுதியில், காங்., சார்பில் முஸ்லிம் வேட்பாளருக்கு சீட் வழங்கும்படி, வலியுறுத்தல் எழுந்துள்ளது. தாவணகெரே தெற்கு தொகுதியில், 80,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே தங்களுக்கு சீட் கொடுக்கும்படி, சில தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒருவேளை சீட் அளிக்காவிட்டால், சுயேச்சை வேட்பாளராக களமிறங்கவும் தயாராகின்றனர்.

சையத் சைபுல்லா, இவரது மகனும், தேசிய இளைஞர் காங்கிரஸ் செயலருமான சையத் காலித் அகமது, எம்.எல்.சி., அப்துல் ஜப்பார், ஆயூப் பயில்வான் உட்பட பலர் சீட் எதிர்பார்க்கின்றனர். இளம் தலைவரான சையத் காலித் அகமதுவுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. இவர் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு நெருக்கமானவர்.

'சிவசங்கரப்பாவின் மகன் மல்லிகார்ஜுன் அமைச்சராக இருக்கிறார். அவரது மருமகள் பிரபா மல்லிகார்ஜுன் எம்.பி.,யாக இருக்கிறார். எனவே, அவரது குடும்பத்துக்கு சீட் கொடுக்க வேண்டாம்' என, பலரும் ஆலோசனை கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us