/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மும்பை - குமரி ரயில் இன்று முதல் இயக்கம்
/
மும்பை - குமரி ரயில் இன்று முதல் இயக்கம்
ADDED : ஏப் 09, 2025 07:38 AM
பெங்களூரு : 'கோடையை முன்னிட்டு, பயணியர் வசதிக்காக சி.எஸ்.எம்.டி., மும்பை - கன்னியாகுமரி இடையே இன்று முதல் ஜூன் 25ம் தேதி வரை வாராந்திர ரயில் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரயில் எண் 01005: சி.எஸ்.எம்.டி., மும்பை - கன்னியாகுமரி வாராந்திர ரயில், மும்பையில் இருந்து இன்று முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அதிகாலை 12:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் வியாழக்கிழமை மதியம் 1:15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். இந்த ரயில், ஜூன் 25ம் தேதி வரை இயக்கப்படும்.
எண் 01006: கன்னியாகுமரி - சி.எஸ்.எம்.டி., மும்பை வாராந்திர ரயில், கன்னியாகுமரியில் இருந்து நாளை (10ம் தேதி) முதல் வியாழக்கிழமை தோறும் மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு சி.எஸ்.எம்.டி., மும்பை சென்றடையும். இந்த ரயில், ஜூன் 26ம் தேதி வரை இயக்கப்படும்.
சி.எஸ்.எம்.டி., மும்பையில் இருந்து புறப்பட்டு, தாதர், தானே, கல்யாண், லோனாவாலா, புனே, தவுண்ட், குர்துவாடி, சோலாபூர், கலபுரகி, வாடி, கிருஷ்ணா, ராய்ச்சூர், மந்திராலயம் சாலை, குண்டக்கல், அனந்தபூர், தர்மாவரம்.
எலஹங்கா, கே.ஆர்.,புரம், பங்கார்பேட்டை, திருப்பத்துார், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.
இடைநிறுத்தம்
தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
ரயில் எண் 16552: மைசூரு அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் தினசரி விரைவு ரயில், வரும் 23, 25, 28 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
எண் 12607: சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு லால்பாக் தினசரி விரைவு ரயில், வரும் 23, 25, 28 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து புறப்படும்.
எண் 66550: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஜோலார்பேட்டை மெமு ரயில், ஏப்., 9, 11, 14, 16 ஆகிய தேதிகளில் சோமநாயகன்பட்டியுடன் நிறுத்தப்படும்.
எண் 66549: ஜோலார்பேட்டை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெமு ரயில், ஏப்., 9, 11, 14, 16 ஆகிய தேதிகளில் சோமநாயகன்பட்டியில் இருந்து புறப்படும்.
எண் 16520: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஜோலார்பேட்டை மெமு ரயில், ஏப்., 9, 11, 14, 16 ஆகிய தேதிகளில் சோமநாயகன்பட்டியுடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

