/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிறந்த குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏரியில் குதித்து தாய் தற்கொலை
/
பிறந்த குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏரியில் குதித்து தாய் தற்கொலை
பிறந்த குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏரியில் குதித்து தாய் தற்கொலை
பிறந்த குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏரியில் குதித்து தாய் தற்கொலை
ADDED : ஆக 24, 2025 11:09 PM
பெங்களூரு,: லால்பாக் பூங்காவின் ஏரியில், இறந்து கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதை, போலீசார் கண்டுபிடித்தனர்.
பெங்களூரின், லால்பாக் பூங்காவில் உள்ள ஏரியில், நேற்று முன் தினம் காலையில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் மிதந்தது. இதை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சித்தாபுரா போலீசாரும் அங்கு வந்து, உடலை மீட்டனர். அவர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தனர்.
இதற்கிடையே, விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, வாணி விலாஸ் மருத்துவமனையில் இருந்து, குழந்தை பிரசவித்த ஒரு பெண், அதிகாலை 4:30 மணிக்கு காணாமல் போனது தெரிந்தது.
இதையறிந்த போலீசார், அப்பெண்ணின் பெற்றோரை அழைத்து வந்து, அவரது உடலை காட்டிய போது, தங்களின் மகள் என்பதை அடையாளம் காட்டினர்.
பெங்களூரின் சர்ஜாபுராவில் வசித்தவர் நவநாத் ராஜ் 26. இவர் அபார்ட்மென்ட் ஒன்றில், காவலாளியாக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஜெனிஷா, 22. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்துக்காக வாணி விலாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆகஸ்ட் 16ம் தேதி, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் குழந்தைக்கு கல்லீரல் தொடர்பான பிரச்னை இருப்பது தெரிந்தது. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான ஜெனிஷா, தற்கொலை செய்து கொள்ள, லால்பாக் பூங்காவுக்கு வந்தார்.
அவர் நடை பயிற்சிக்கு வந்திருப்பதாக நினைத்து, அவரை பாதுகாப்பு ஊழியர் உள்ளே அனுமதித்தார். பூங்காவுக்கு சென்ற ஜெனிஷா ஏரியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டது, விசாரணையில் தெரிந்தது.