/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகள், மகனை கொன்று தாயும் தற்கொலை
/
மகள், மகனை கொன்று தாயும் தற்கொலை
ADDED : ஏப் 05, 2025 01:28 AM
துமகூரு : துமகூரு, அடலகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஹாதேவய்யா, 50. இவரது மனைவி விஜயலட்சுமி, 45. இவர்களின் மகள் சூடாமணி, 23, மகன் நரசிம்மராஜு, 14. இருவரும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள்.
இவர்களை வளர்க்க தம்பதி மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். மஹாதேவய்யா கூலி வேலைக்கு சென்றதால், பிள்ளைகளை அவரால் சரியாக பராமரிக்க முடியவில்லை.
இதற்கிடையில், விஜயலட்சுமிக்கும் சில மாதங்களாக, அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மனம் உடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் மட்டும் இறந்து விட்டால், பிள்ளைகளை கவனிக்க கணவர் கஷ்டப்படுவார் என்று நினைத்த அவர், பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் காலை, மஹாதேவய்யா வேலைக்காக துமகூரு சென்றார். இதையடுத்து சூடாமணி, நரசிம்மராஜு கழுத்தை கயிறால் இறுக்கி, விஜயலட்சுமி கொலை செய்தார். பின், அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

