/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுத்தை நடமாட்டம் கிராமத்தினர் கிலி
/
சிறுத்தை நடமாட்டம் கிராமத்தினர் கிலி
ADDED : ஜன 27, 2026 05:01 AM
உடுப்பி: பிரம்மாவரா தாலுகாவின் நடூரு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்திலேயே, சிறுத்தை நடமாடுவதால், குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
உடுப்பி மாவட்டம், பிரம்மாவரா தாலுகாவின், நடூரு கிராமத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளி அருகே வசிப்பவர் புட்டய்ய ஷெட்டி. இவரது வீட்டு வளாகத்திலேயே, நேற்று முன் தினம் இரவு சிறுத்தை நடமாடியது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று காலை இதை கவனித்த குடும்பத்தினர் பீதி அடைந்தனர். வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
இந்த வீட்டின் அருகிலேயே அரசு உயர்நிலைப்பள்ளி இருப்பதால், தகவல் பரவி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவே தயங்குகின்றனர்.
சமீப நாட்களாக நடூரு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மக்கள் மாலை, இரவில் வெளியே நடமாட அஞ்சுகின்றனர். விவசாயிகள் தோட்டம், வயலுக்கு செல்ல முடியவில்லை. விரைவில் சிறுத்தைகளை பிடிக்கும்படி கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.
சிறுத்தை நடமாடிய இடத்தை, வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். கூண்டு வைப்பதாக கூறியுள்ளனர். முடிந்த வரை தனியாக நடமாட வேண்டாம் என, எச்சரித்துள்ளனர்.

