/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் உள்ள ஜாதி பட்டியலில் இணைக்க கொங்கு வெள்ளாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு
/
கர்நாடகாவில் உள்ள ஜாதி பட்டியலில் இணைக்க கொங்கு வெள்ளாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு
கர்நாடகாவில் உள்ள ஜாதி பட்டியலில் இணைக்க கொங்கு வெள்ளாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு
கர்நாடகாவில் உள்ள ஜாதி பட்டியலில் இணைக்க கொங்கு வெள்ளாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு
ADDED : ஆக 26, 2025 03:03 AM

பெங்களூரு: 'கொங்கு வெள்ளாளர் ஜாதியை, கர்நாடகாவில் உள்ள ஜாதிப்பட்டியலில் இணைக்க வேண்டும்,' என சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவிடம் கொங்கு வெள்ளாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
சமூக நலத்துறை அமைச்சரும், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மஹாதேவப்பா, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தலைவர் மதுசூதன் நாயக் ஆகியோரிடம் பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், குண்டுலுபேட், ஹனுார், ெஹச்.டி.கோட், ஹிரியூர், பத்ராவதி மற்றும் ெஹாஸ்பேட்டை சேர்ந்த கொங்கு வெள்ளாளர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அளித்த மனு குறித்து, கர்நாடகா மாநில கொங்கு வெள்ளாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் வெ.ரகுபதி கூறியதாவது:
கொள்ளேகால் நம் நாட்டில் 1956 ல் மொழிவாரி மாநிலங்களாக பிரித்த போது, தமிழகத்தின் கோயம்புத்துார் மாவட்டத்தில் இருந்த கொள்ளேகால் தாலுகா, கர்நாடகாவில் உள்ள மைசூரு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இங்கு வசித்தவர்களில் பெரும்பாலானோர், கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருந்தனர்.
கர்நாடகாவில் இணைத்த போது, கொங்கு வெள்ளாளர் சமூகத்தை கர்நாடக மாநில ஜாதி பட்டியலில் இணைக்கவில்லை. இதனால் இன்று வரை, இச்சமூகத்தினருக்கு கர்நாடக அரசின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து இட ஒதுக்கீடு சலுகைகள் பெற முடியாமல் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
உதாரணமாக, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு தேவை யான ஜாதி சான்றிதழ் பெற முடியவில்லை; மேற்படிப்பிற்கு தேவையான இட ஒதுக்கீட்டை பெறுவதில் சிக்கல்; அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பொது பிரிவினர் வகுப்பில் கிடைக்கும் சிறிய வாய்ப்பினை மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
இடப்பெயர்ச்சி கொள்ளேகால் பகுதியில் மட்டுமின்றி கர்நாடகாவின் பிற மாவட்டங்களிலும் கொங்கு வெள்ளாளர்கள் இடம் பெயர்ந்து பெங்களூரு, மைசூரு, ஷிவமொக்கா, சாம்ராஜ்நகர், குண்டுலுபேட், ஹனுார், ஹெச்.டி.கோட், மாண்டியா, தாவணகெரே, ஹிரியூர், பத்ராவதி, ஹொஸ்பேட் உட்பட சில இடங்களில் கணிசமான அளவில் வசித்து வருகின்றோம். எனவே, கொங்கு வெள்ளாளர் ஜாதியை, கர்நாடகாவில் உள்ள ஜாதிப்பட்டியலில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.