/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் இயந்திரம் வாங்க கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை முடிவு
/
எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் இயந்திரம் வாங்க கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை முடிவு
எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் இயந்திரம் வாங்க கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை முடிவு
எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் இயந்திரம் வாங்க கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை முடிவு
ADDED : ஆக 26, 2025 02:53 AM

பெங்களூரு: கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில், தற்போது செயல்படும் எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் இயந்திரம், அவ்வப்போது பழுதடைவதால், புதிய இயந்திரம் வாங்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் நவீன் கூறியதாவது:
கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில், நடப்பாண்டு ஜூலையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் இயந்திரம் பழுதடைந்தது.
நோயாளிகளுக்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதால், எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் செய்து கொள்ள, விக்டோரியா, நிமான்ஸ், சஞ்சய் காந்தி உட்பட, சில மருத்துவமனைகளுடன், கித்வாய் ஒப்பந்தம் செய்து கொண்டது.
நோயாளிகள் அங்கு சென்று, ஸ்கேனிங் வசதி செய்ய, மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது.
அதன்பின் கித்வாய் மருத்துவமனையின் எம்.ஆர்..ஐ., ஸ்கேனிங் இயந்திரம் பழுது பார்க்கப்பட்டது. தற்போது தினமும் 25 நோயாளிகளுக்கு ஸ்கேனிங் செய்யப்படுகிறது. கித்வாய் மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கர்நா டகாவின், பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், நோயாளிகள் வருகின்றனர். பரிசோதனையில் நோய் கண்டுபிடிக்கப்படுகிறது.
தற்போது செயல்படும் எம்.ஆர்.ஐ., இயந்திரம் பழுதடைவதால், புதிதாக இயந்திரம் வாங்க முடிவு செய்துள்ளோம்.
இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இயந்திரம் வாங்க டெண்டர் அழைத்துள்ளோம்.
இதனால் அதிகமான நோயாளிகளுக்கு, நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.