sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐ.பி.எல்., போட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்

 ஐ.பி.எல்., போட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்

 ஐ.பி.எல்., போட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்


ADDED : ஏப் 14, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 06:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'ஐ.பி.எல்., போட்டிகளின் போது, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும், என பி.எம்.டி.சி., நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் வருகை பல ரக வாகனங்களில் வருகை தருவர். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

இதை கட்டுப்படுத்துவதற்காக, ரசிகர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக, ஐ.பி.எல்., டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்து உள்ளது. அதுமட்டுமின்றி, ஐ.பி.எல்., போட்டிகள் அன்று அதிகாலை 2:00 மணி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சிறப்பு பஸ் சேவையை பி.எம்.டி.சி., நிர்வாகம் அறிமுகம் செய்து உள்ளது.

வரும் 15, 18, 24 ஆகிய நாட்களில் சின்னசாமி மைதானத்தில் இருந்து சர்ஜாபூர், எலக்ட்ரானிக் சிட்டி, பன்னரகட்டா தேசிய பூங்கா, ஆர்.கே.ஹெக்டே நகர், ெஹாஸ்கோட், பனசங்கரி என பல பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. போட்டி முடிந்தவுடன் பஸ்கள் இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us