/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 புலி குட்டிகள் இறப்பு காரணம் குறித்து ஆய்வு
/
2 புலி குட்டிகள் இறப்பு காரணம் குறித்து ஆய்வு
ADDED : ஆக 15, 2025 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில், கடந்த 11ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், இறந்த ஆண், பெண் புலிக்குட்டிகளை பார்த்தனர்.
பிறந்து பத்து நாட்களே ஆன குட்டிகள், தாய் புலி விட்டு சென்றதால், உணவு இன்றி பசியால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிந்தது.
வன அதிகாரி சுரேந்திரா கூறுகையில், ''தாய் புலியிடம் இருந்து குட்டிகள் பிரிந்ததால் புலி குட்டிகள், பசியால் இறந்தனவா அல்லது தாய் புலி இறந்ததால் அவை பசியால் இறந்தனவா என்பதை அறிய, அவற்றின் உறுப்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அறிக்கை வந்த பின், உண்மையான காரணம் தெரியவரும்,'' என்றார்.