/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டவிரோத ஐஸ்கிரீம் தொழிற்சாலைக்கு 'சீல்'
/
சட்டவிரோத ஐஸ்கிரீம் தொழிற்சாலைக்கு 'சீல்'
ADDED : டிச 13, 2025 06:55 AM

துமகூரு: சட்டவிரோதமாக செயல்பட்டதுடன், தரமற்ற ஐஸ்கிரீம் தயாரித்து சிறார்களின் உயிரோடு விளையாடிய ஐஸ்கிரீம் தொழிற்சாலைக்கு, தாலுகா நிர்வாகம் சீல் வைத்தது.
துமகூரு நகரின் குப்பி கேட் அருகில் 'தில்குஷ்' என்ற ஐஸ்கிரீம் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் தரமாக இல்லை. அசுத்தமான தண்ணீர் பயன்படுத்துகின்றனர். முறைப்படி லைசென்சும் பெறவில்லை என, புகார் வந்தது.
இதை தீவிரமாக கருதிய, துமகூரு தாசில்தார் ராஜேஸ்வரி தலைமை யிலான அதிகாரிகள், துமகூரு மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், நேற்று காலையில் தொழிற்சாலைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். தொழிற்சாலை துாய்மையே இருக் கவில்லை. லைசென்ஸ் பெறாமல் செயல்படுவதும் தெரிந்தது.
உடனடியாக ஐஸ்கிரீம் தொழிற்சாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
துமகூரின் மற்ற இடங்களில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலைகளில் சோதனை நடத்தி, விதிமுறைகள் பின்பற்றுகின்றனரா என்பதை ஆய்வு செய்ய உள்ளனர்.

