தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.சி., சமூகத்திற்கான உள் இடஒதுக்கீடு அமல்படுத்த அரசு அதிகாரபூர்வ உத்தரவு

 எஸ்.சி., சமூகத்திற்கான உள் இடஒதுக்கீடு அமல்படுத்த அரசு அதிகாரபூர்வ உத்தரவு

 எஸ்.சி., சமூகத்திற்கான உள் இடஒதுக்கீடு அமல்படுத்த அரசு அதிகாரபூர்வ உத்தரவு


ADDED : ஏப் 29, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: எஸ்.சி., சமூகத்திற்கான, 15 சதவீத உள்இடஒதுக்கீட்டை அமல்படுத்த, அரசு அதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கர்நாட காவில் எஸ்.சி., சமூகத்திற்கு உட்பட்ட, 101 துணை பிரிவுகளுக்கு, உள்இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக அமைக்கப்பட்ட ஓய்வு நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான குழு, எஸ்.சி., வலது, இடது கைபிரிவினருக்கு தலா, 6 சதவீதம்; மற்ற பிரிவினருக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என, பரிந்துரை அளித்தது.

இடஒதுக்கீடு தொடர்பாக நாடோடி சமூகத்தினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 17 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதித்து, விசாரணையை ஒத்தி வைத்தது.

இதனால், முன்பிருந்தது போலவே 15 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. கடந்த, 24 ம் தேதி நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில், வலது, இடது கை பிரிவினருக்கு தலா 5.25 சதவீதம்; மற்ற பிரிவினருக்கு 4.50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வ உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது.

அந்த உத்தரவில், இடஒதுக்கீட்டை அமல் படுத்த ஒப்புதல் கிடைத்து இருந்து இருப்பதால், நிதித்துறையால் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 56,432 பணியிடங்களை நேரடி ஆள்சேர்ப்பு மூலம் நிரப்ப வேண்டும் என, பணி நியமன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எஸ்.சி., சமூகத்தில் மிகவும் பின்தங்கிய, 59 பிரிவினருக்கு, 'சி' பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களில் 20 சதவீதம் ஒதுக்க வேண் டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us