/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தையை பலி கொடுக்க முயற்சி; வளர்ப்பு பெற்றோரிடம் விசாரணை
/
குழந்தையை பலி கொடுக்க முயற்சி; வளர்ப்பு பெற்றோரிடம் விசாரணை
குழந்தையை பலி கொடுக்க முயற்சி; வளர்ப்பு பெற்றோரிடம் விசாரணை
குழந்தையை பலி கொடுக்க முயற்சி; வளர்ப்பு பெற்றோரிடம் விசாரணை
ADDED : ஜன 05, 2026 05:24 AM

ஹொஸ்கோட்: புதையல் ஆசையால், எட்டு மாத ஆண் குழந்தையை பலி கொடுக்க, வளர்ப்பு பெற்றோர் முயற்சித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட் தாலுகாவின் சூலிபெலேவின் ஜனதா காலனியில் தன் மனைவியுடன் வசிப்பவர் சையத் இம்ரான், 34. இவர் எட்டு மாதங்களுக்கு முன், கூலி தொழிலாளியின் ஆண் குழந்தையை பணம் கொடுத்து வாங்கி வளர்க்கின்றனர்.
பவுர்ணமி நாளன்று ஆண் குழந்தையை பலி கொடுத்தால், புதையல் கிடைக்கும் என, யாரோ மந்திரவாதி கூறியதை, சையத் இம்ரானும், அவரது மனைவியும் நம்பினர். குழந்தையை பலி கொடுக்கவும் முடிவு செய்தனர். நேற்று முன் தினம் பவுர்ணமி என்பதால், பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நள்ளிரவு வீட்டுக்குள்ளேயே பள்ளம் தோண்டி, பூஜை நடத்தினர். இதை அறிந்த அப்பகுதியினர்,
குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் கூறினர். உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள், சையத் இம்ரான் வீட்டை சோதனை நடத்தினர். அறையில் பள்ளம் தோண்டி, பூஜை செய்வது தெரிந்தது. குழந்தையை மீட்டனர்.
சையத் இம்ரான், அவரது மனைவியிடம் சூலிபெலே போலீசார் விசாரித்தனர். குழந்தையை சட்டவிரோதமாக தத்து பெற்றதும், போலியான பிறப்பு சான்றிதழ் பெற்றிருப்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
தற்போது குழந்தை, அரசு சார்ந்த குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

