/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின் கசிவால் தீ விபத்து 48 ஆடுகள் கருகி பலி
/
மின் கசிவால் தீ விபத்து 48 ஆடுகள் கருகி பலி
ADDED : ஆக 26, 2025 02:54 AM
சிக்கபல்லாபூர்: கம்மரவாரிபள்ளி கிராமத்தில், கொட்டகையில் தீப்பிடித்ததில், விவசாயிக்கு சொந்தமான 48 ஆடுகள் தீக்கிரையாகின.
சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகாவின், திம்மம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கம்மரவாரிபள்ளி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி மஞ்சுநாத். இவர் ஆடுகள் வளர்க்கிறார் .
வீட்டு முன் உள்ள ஓலை கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில், மஞ்சுநாத் வீட்டில் இருந்த, 'டிவி'யில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பொறி ஆடுகள் இருந்த ஓலை கொட்டகை மீது விழுந்து தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ கொட்டகை முழுதும் பரவியது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், அதற்குள் 48 ஆடுகள் கருகி உயிரிழந்தன. இதில் மஞ்சுநாத்துக்கு 4.8 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் தீப்பிடிக்கவில்லை. பெஸ்காம் அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தை, நேற்று பார்வையிட்டனர்.