sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிருஷ்ணா நதியில் முதலையிடம் சிக்கிய விவசாயி

கிருஷ்ணா நதியில் முதலையிடம் சிக்கிய விவசாயி

கிருஷ்ணா நதியில் முதலையிடம் சிக்கிய விவசாயி


ADDED : ஆக 24, 2025 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 05:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயபுரா: கிருஷ்ணா நதியில் கால்நடையை குளிப்பாட்ட சென்ற விவசாயியை, முதலை இழுத்துச் சென்றது. அவரை கண்டுபிடிக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

விஜயபுரா மாவட்டம், முத்தேபிகலின் தங்கட்கி கிராம பஞ்சாயத்து உட்பட்ட குஞ்சகனுார் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாத் ஹனுமந்த் காம்ப்ளி, 38; விவசாயி. இவர், நேற்று காலையில் கால்நடைகளை குளிப்பாட்ட, கிருஷ்ணா நதிக்கு அழைத்துச் சென்றார்.

நதியில் கால்நடையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது, முதலை ஒன்று, காசிநாத்தின் காலை பிடித்து, தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்த அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த தாரேப்பா, இதை கிராமத்தினரிடம் தெரிவித்தார்.

உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காசிநாத்தை கண்டு பிடிப்பதற்காக, கூடலசங்கமத்தில் இருந்து படகு வரவழைக்கப்பட்டு, கிருஷ்ணா நதியில் தேடி வருகின்றனர்.

காசிநாத்தை முதலை இழுத்துச் சென்றதை அறிந்த மக்கள், அச்சம் அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us