sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/  'மக்கள் தொகை கணக்கெடுப்பில்  அனைவரும் பங்கேற்க வேண்டும்'

  'மக்கள் தொகை கணக்கெடுப்பில்  அனைவரும் பங்கேற்க வேண்டும்'

  'மக்கள் தொகை கணக்கெடுப்பில்  அனைவரும் பங்கேற்க வேண்டும்'


ADDED : ஏப் 17, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 05:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பெங்களூரில் நேற்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கி உள்ளது. மே, 15ம் தேதி வரை நடக்கும் இப்பணியில், அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்,'' என, ஜி.பி.ஏ., சிறப்பு கமிஷனர் முனிஷ் மவுத்கில் கூறினார்.

இதுதொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:

ஜி.பி.ஏ., என்ற, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று முதல் அடுத்த மாதம், 15ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.

வீடு, வீடாக கணக்கெடுப்பு நடக்கும். அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளித்தால் அதிகபட்சம், 8 நிமிடத்திற்குள் ஒரு வீட்டில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும்.

துவக்கத்தில் காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை கணக்கெடுப்பு நடக்கும். ஒரு வாரம் கடந்ததும், இரவு 9:00 மணி வரை பணி நடக்கும். அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இப்பணியில் 26,000 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அதில், 10,000 பேர் ஆசிரியர்கள். கர்ப்பிணி, உடலில் ஏதேனும் பிரச்னை இருப்பவர்கள் கணக்கெடுப்பில் பங்கேற்க விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us