தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கட்டட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் வினியோகம்

 கட்டட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் வினியோகம்

 கட்டட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் வினியோகம்


ADDED : பிப் 15, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: தொழிலாளர் நலத்துறை சார்பில், அமைப்பு சாரா கட்டட தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு கவசங்கள் அடங்கிய தொகுப்பு நேற்று வழங்கப்பட்டது.

ராபர்ட்சன் பேட்டையில் உள்ள தாலுகா நிர்வாக அலுவலகமான, மினி விதான் சவுதா அரங்கில், இதற்கான நிகழ்ச்சி தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நேற்று நடைபெற்றது.

கட்டட தொழிலாளர்கள் மற்றும் இதர அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனுக்காக, கர்நாடக அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆண்டு தோறும் பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது.

இவ்வாண்டின் சலுகை திட்டத்தில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களான ஹெல்மெட், காலணி, கண் கண்ணாடி, கையுறைகள் அடங்கிய தொகுப்பு, 500 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திரா காந்தி கட்டட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.சம்பத்குமார், குடா தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us