sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரைம்கார்னர்

கிரைம்கார்னர்

கிரைம்கார்னர்


ADDED : ஜூலை 15, 2025 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 04:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

* மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

விஜயநகரா, ஹரப்பனஹள்ளியின், துக்காவதி கிராமத்தில் வசித்தவர் ரமேஷ், 40. இவரது மகன் சந்திரப்பா, 17. நேற்று மாலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, வேலியில் சுற்றப்பட்டிருந்த மின் கம்பியை தொட்டதில், மின்சாரம் பாய்ந்து தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.

* கைதியிடம் சிம்கார்டு பறிமுதல்

குற்ற வழக்கில் கைதான உமைத், 35, என்பவர், ஷிவமொக்காவின், சோகானேவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை நேற்று மதியம், விசாரணைக்காக புத்துார் நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். திரும்பி வந்த அவரை சோதனையிட்டபோது, சிம் கார்டும், தகடால் செய்யப்பட்ட பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.

* கரடி தாக்கி ஒருவர் பலி

சாம்ராஜ்நகர், எலந்துாரின், சீகேபெட்டா கிராமத்தில் வசித்தவர் சித்தேகவுடா, 30. இவர் நேற்று மதியம், வனப்பகுதி சாலையில் நடந்து சென்றபோது, கரடி பாய்ந்து தாக்கியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

* பைக் திருடன் கைது

மைசூரில் பல்வேறு இடங்களில், கள்ளச்சாவி பயன்படுத்தி ஸ்கூட்டர்களை திருடியவரை, மைசூரு நகர போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து 24 ஸ்கூட்டர்கள் மீட்கப்பட்டன.

* பஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்

பீதரின், சிக்பேட் நகர் அருகில் நேற்று காலை கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் பயணம் செய்த எஸ்.எஸ்.எல்.சி., மாணவர், ஓடும் பஸ்சில் இருந்து குதித்தார். இதை கண்ட ஓட்டுநர் உமேஷ், மாணவருக்கு புத்திமதி கூறினார். கோபமடைந்த மாணவர், தன் உறவினர்கள் அங்கு வரவழைத்து, உமேஷை கண் மூடித்தனமாக தாக்கினார். மயங்கி விழுந்த அவரை நடத்துநர் விஜய்குமார், மருத்துவமனையில் சேர்த்தார். போலீசாரிடமும் புகார் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us