sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கொரோனா முறைகேடு வழக்கு 2வது இடைக்கால அறிக்கை

கொரோனா முறைகேடு வழக்கு 2வது இடைக்கால அறிக்கை

கொரோனா முறைகேடு வழக்கு 2வது இடைக்கால அறிக்கை


ADDED : ஏப் 06, 2025 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 07:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு,: கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில் கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் 2,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், கொரோனா மருத்துவ உபகரண முறைகேடு பற்றி விசாரிக்க ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி, முதல் இடைக்கால அறிக்கையை, சித்தராமையாவிடம் ஜான் மைக்கேல் குன்ஹா தாக்கல் செய்தார்.

அதில், சீன நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து, மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன. டெண்டர்களுக்கு அழைப்பு விடுக்காமல் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது என்பது உட்பட, பல விஷயம் குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னாள் அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இரண்டாவது இடைக்கால அறிக்கையை, சித்தராமையாவிடம், ஜான் மைக்கேல் குன்ஹா நேற்று இரவு தாக்கல் செய்தார். இது, எத்தனை பக்க அறிக்கை என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.

கொரோனா முறைகேடு தொடர்பான முக்கிய தகவல்கள் இந்த அறிக்கையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us