/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி கோலாரில் மாநாடு
/
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி கோலாரில் மாநாடு
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி கோலாரில் மாநாடு
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி கோலாரில் மாநாடு
ADDED : ஜன 07, 2026 05:13 AM
தங்கவயல்: கோலார், சிக்க பல்லாப்பூர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி, வரும் 17ம் தேதி, கோலாரில் கோரிக்கை மாநாடு நடக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக, ஆலோசனை நடத்த, ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில் நேற்று கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சி.வி.ராஜேந்திரன் வரவேற்றார். ஆஞ்சனேயப்பா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
நிரந்தர குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். எத்தினஹொளே, எரகோள், கே.சி.வேலி, காவிரி, கிருஷ்ணா நதி நீர் கோலார், சிக்கபல்லாப்பூர், பெங்களூரு ரூரல் ஆகிய மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவது. கோலாரில் வரும், 17ம் தேதி மாநாடு நடத்துவது.