/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெலகாவி கலெக்டர் மீது சபாநாயகரிடம் புகார்
/
பெலகாவி கலெக்டர் மீது சபாநாயகரிடம் புகார்
ADDED : டிச 22, 2025 06:19 AM

- நமது நிருபர் -:
போராட்டம் நடத்தும் தனது உரிமையை பறித்ததாக, பெலகாவி கலெக்டர் முகமது ரோஷன் மீது, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், மஹாராஷ்டிரா சிவசேனா எம்.பி., தைரியஷீல் மானே புகார் அளித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்து உள்ள கடிதம்:
பெலகாவியில் நவம்பர் 1 ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி, பெலகாவியில் கருப்பு தினம் கொண்டாடியது. இதில் பங்கேற்க சென்ற என்னை, கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
என் மீது எந்த குற்ற பின்னணியும் இல்லை. எம்.பி., என்ற முறையில் போராட்டம் நடந்த இடத்திற்கு சென்றது தவறா. பெலகாவி கலெக்டர் முகமது ரோஷன் அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, என்னை பெலகாவிக்குள் நுழைய விடாமல் தடுத்து உள்ளார். போராட்டம் நடத்தும் எனது உரிமையை அவர் பறித்து உள்ளார். அவர் மீது மனித உரிமை மீறல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
'பெலகாவி மாவட்ட கலெக்டரின் நடவடிக்கை சரியானது என மாவட்ட கன்னட அமைப்புகள் குழு தலைவர் அசோக் சந்தரகி தெரிவித்து உள்ளார்.

