
தருண் சுதீர் தயாரிக்கும், ஏழுமலை திரைப்படம், செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதுகுறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'மாறுபட்ட காதல் கதை கொண்ட படம். கன்னடத்துடன், தமிழ், தெலுங்கிலும் திரையிட முடிவு செய்துள்ளோம். கர்நாடகா மற்றும் தமிழகம் இடையிலான காதல் கதையை படமாக்கியுள்ளோம்.
நடிகை ரக்ஷிதா பிரேமின் சகோதரர் ராணா, கன்னட இளைஞராகவும், பிரியா ஆச்சார் தமிழ் பெண்ணாகவும் நடித்துள்ளனர். ஜகபதி பாபு, நாகாபரணா, கிஷோர் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னியுள்ளோம். சாம்ராஜ்நகர், சேலம், ஈரோடு உட்பட, கர்நாடகா, தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துகிறோம்' என்றனர்.
கதை கொண்ட படம்
தனுஷ் கவுடா இயக்கத்தில், வினுகவுடா, மோக்ஷதா கவுடா நாயகன், நாயகியாக நடிக்கும் மிடில் கிளாஸ் ராமாயணா திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது. மோக்ஷிதா கூறுகையில், “இந்த திரைப்படம் நல்ல கதை கொண்டது. இது நான் நடிக்கும் முதல் படமாகும். சின்னத்திரை நடித்த, ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற எனக்கு, சினிமா உலகம் புதியது. படம் சிறப்பாக வந்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது. என் கதாபாத்திரத்தை இயக்குநர் நன்றாக வடிவமைத்துள்ளார். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாகும்,” என்றார்.