ADDED : டிச 22, 2025 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயநகரா: முதல்வர் பதவி விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது, மல்லிகார்ஜுன கார்கே கோபம் அடைந்து உள்ளார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக முதல்வர் பதவி விவகாரத்தில் நிலவும் குழப்பம் குறித்து, கர்நாடக காங்கிரஸ் துணைத்தலைவர் சுதர்சன் எழுதிய கடிதம், என்னிடம் இன்னும் வரவில்லை. டில்லி சென்ற போது கடிதத்தில் என்ன உள்ளது என்று பார்த்து முடிவு எடுப்பேன்.
முதல்வர் பதவி குழப்பத்தை உருவாக்கியது, கட்சி மேலிடம் இல்லை. இங்குள்ளவர்கள் தான். எல்லாவற்றிக்கும் மேலிடம் என சொல்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

