sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 செக் போஸ்ட்

/

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : மே 11, 2026 02:37 AM

Google News

ADDED : மே 11, 2026 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேனர்களுக்கு தடையில்லை

ரா. பேட்டையில் உள்ள பிரதான சாலைகளில் மின் விளக்குகளுக்காக அமைக்கப்பட்ட மின் கம்பங்களில் அரசியல்வாதிகளின் விளம்பர பேனர்களை மிடுக்காக மாட்டியிருக்காங்க. டிஜிட்டல் பேனர்களை தொங்க விடுவதற்காகவா மின் கம்பங்கள் உள்ளன.

பேனர்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த போதிலும், தொகுதியின் அதிகாரம் உள்ளவர்களின், 50 க்கும் மேற்பட்ட பேனர்களுக்கு தடையே இல்லை போல.

மாநிலம் முழுவதும் இரும்பு மின் கம்பங்களை அகற்றி, சிமென்ட் கான்கிரீட் கம்பங்களை நிறுவி வராங்க. ஆனால் கோல்டு சிட்டியில் மட்டுமே, பல இடங்களில் இரும்பு கம்பங்களை அகற்றாமல் விட்டு வைத்திருக்காங்க. இது எத்தனை பேரை பலி வாங்க போகுதோ. ஏன் மின் துறை கவனிக்கலயோ!

கேட்பாரில்லையே!

இ ங்கிலாந்து நாட்டின் பல கருவிகளைக் கொண்டு இயங்கிய மைனிங் கம்பெனி மருத்துவமனை மூடி, 20 ஆண்டுகள் கடந்து போனது. தற்போது வெறும் கட்டடம் மட்டுமே இருக்கிறதே தவிர, அதன் உபகரணங்கள் என்னவானதோ. யார் சுருட்டிட்டாங்களோ.

கொரோனா காலத்தில் ம.அரசு, தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியில் பல லட்சம் வந்து குவிந்தது. அதில் கட்டடம் மட்டுமே புதுப்பிச்சாங்க.

இதில் சில நாட்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கப் பட்டது. கொரோனா மாயமான பின், மறுபடியும் மூடிட்டாங்க. இதனை மறுபடியும் மருத்துவமனையாக்க நல்ல காலம் எப்போது பிறக்குமோ.

இங்கு பல நிறுவனங்கள், மருத்துவமனையை ஆரம்பிக்க முன் வந்தும் அனுமதி கிடைக்காததால் கைவிட்டுட்டாங்க. ஒரு லட்சம் பேர் வாழும் இந்த இடத்தில் மீண்டும் மருத்துவ வசதியை வழங்க அரசுகளும் முன் வரலையே!

ரயில்வே பாலம் அமையுமா?

நா ட்டில் பல நகரங்களில் ரயில் நிலையங்களே கிடையாது. ஆனால் கோல்டு சிட்டியில் 115 ஆண்டுகளுக்கு முன்பே ப.பேட்டையில் இருந்து மா.குப்பம் வரையில் ரயில் பாதைகளை அமைத்து, ரயில்களை இயக்கினாங்க.

கடந்த 10 ஆண்டுகளில் பல ரயில் நிலையங்களை நவீனமாக்கி இருக்காங்க. ஆனால், பழமையான உரிகம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே பாலம் அமைக்க பலமுறை சர்வே செய்தாங்களே தவிர, சுரங்க பாதை அமைக்கலாமா அல்லது மேம்பாலம் அமைக்கலாமா என்றே பேசியே காலத்தை ஓட்டுறாங்க. இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தபாடில்லை.

இதனால் இப்பவும் ரயில்கள் வந்து, செல்லும், போது ஏராளமான வாகனங்கள் ரயில்வே கேட் திறக்கும் வரை காத்திருக் குறாங்க. இதுவரை மேற்கொண்ட சர்வே பணிகள், சும்மா டைம் பாஸ் செய்யவா. இதற்காக நிதி எதுவும் ஒதுக்கலயா. அல்லது ஒதுக்கிய நிதி ஸ்வாஹா ஆகி விட்டதா?

ஹெல்மெட் சட்டம் துாங்குது!

ர வுடிகள் நடமாட்டத்தை கட்டுப் படுத்த காக்கி காரங்க கோல்டு சிட்டி பகுதியில் மட்டுமே ரோந்து பணியில் ஈடுபட்டிருக்காங்க. இது சாதாரண பொது மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்குது. இதனால் காக்கிகள் தரப்பில் சாதித்தது என்னவோ. இதுவரை எத்தனை ரவுடிகளை அடக்க முடிந்தது.

இந்த 'ரோடு ஷோ' வேலைகளை, கோல்டு சிட்டி 'காக்கி மாவட்டத்தில்' அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள இடங்களிலும் பார்வையை செலுத்தலாமே. 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்ற காக்கி சட்டம் அமல் படுத்த, காக்கிகள் பரபரப்பாக செயல்பட்டாங்க.

இது ஓரிரு மாதங்களில் மட்டுமே காண முடிந்தது. போலீஸ் மாவட்டத்தில் கோல்டு சிட்டியில் மட்டுமே இந்த கட்டுப்பாடு இருந்தது. மற்ற இடங்களில் அதை காக்கிகள் கண்டுக்கலயே.

ஹெல்மெட் கிராம பகுதிகளின் காவல் நிலைய எல்லைகளில் இதன் விழிப்புணர்வு பிரச்சாரம் போய் சேரலையோ!






      Dinamalar
      Follow us