/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
24 மணி நேரமும் திட்ட முடியுமா? சதீஷ் ஜார்கிஹோளி கேள்வி
/
24 மணி நேரமும் திட்ட முடியுமா? சதீஷ் ஜார்கிஹோளி கேள்வி
24 மணி நேரமும் திட்ட முடியுமா? சதீஷ் ஜார்கிஹோளி கேள்வி
24 மணி நேரமும் திட்ட முடியுமா? சதீஷ் ஜார்கிஹோளி கேள்வி
ADDED : ஆக 24, 2025 11:07 PM

யாத்கிர்: ''ஆர்.எஸ்.எஸ்., பாடலை பாடியதால், துணை முதல்வர் சிவகுமாருக்கு, பா.ஜ., ஆதரவாக இருக்குமா,'' என்று, பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கேள்வி எழுப்பி உள்ளார்.
யாத்கிரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தர்மஸ்தலா வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னையா என்பவர், நீதிமன்றத்திற்கு சென்று பிரிவு 164ன் கீழ் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக அரசு எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கின் உண்மை வெளியே வர வேண்டும் என்பதால், எஸ்.ஐ.டி., விசாரணைக்கு கொடுக்கப்பட்டது. இப்போது என்.ஐ.ஏ., விசாரணை வேண்டும் என்று பா.ஜ., தலைவர்கள் கேட்கின்றனர்.
நாகேந்திரா, ராஜண்ணா அமைச்சர் பதவி இழந்திருப்பதன் மூலம், எஸ்.டி., சமூகத்திற்கு, காங்கிரஸ் அநீதி இழைக்கிறது என்று சொல்ல முடியாது. கூடிய விரைவில் டில்லி சென்று, மேலிட தலைவர்களை சந்தித்து ராஜண்ணா பேசுவார்.
பின், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று, நாங்கள் ஒன்று கூடி தீர்மானிப்போம்.
பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் சந்தோஷை அவதுாறாக பேசியதால், மகேஷ் திம்மரோடி கைது செய்யப்பட்டார். இதன் பின்னணியில் துணை முதல்வர் சிவகுமார் உள்ளார் என்று சொல்ல முடியாது. சந்தோஷ் தரப்பில் புகார் செய்ததால், போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ராகுலை தினமும் பா.ஜ., தலைவர்கள் திட்டுகின்றனர். அதற்காக அனைவர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியுமா. பழிவாங்கும் அரசியலை ராகுல் ஒருபோதும் செய்தது இல்லை.
சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ்., பாடலை பாடியதால் சிவகுமாருக்கு, பா.ஜ., ஆதரவாக இருக்கும் என்று கூற முடியுமா. அரசியலில் 24 மணி நேரமும் ஒரு கட்சியை விமர்சித்து கொண்டு இருக்க முடியுமா. தற்போதைய அரசியல் நாளுக்கு, நாள் மாறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.