/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அக்காவின் கள்ளக்காதலனை கொன்ற தம்பி கைது
/
அக்காவின் கள்ளக்காதலனை கொன்ற தம்பி கைது
ADDED : ஜூலை 26, 2025 05:03 AM
ஹாவேரி: தன் அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை, கொலை செய்த தம்பி கைது செய்யபட்டார்.
ஹாவேரி மாவட்டம், ராணி பென்னுார் தாலுகாவின் காகோளா கிராமத்தில் வசித்தவர் திலீப் ஹித்தலமனி, 47. இவர் சலகேரி கிராமத்தில் வசிக்கும் ராஜய்யா, 27, என்பவரின் அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அவ்வப்போது இருவரும் ரகசியமாக சந்தித்து, உல்லாசமாக இருந்தனர்.
இதையறிந்த ராஜய்யா, அக்காவையும், திலீப் ஹித்தலமனியையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால் தம்பிக்கும், அக்காவுக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காலையில், கள்ளக்காதலியை பார்க்க திலீப் வந்தார்.
இவரை பார்த்து கோபம் அடைந்த ராஜய்யா, தீலிப் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.
தகவலறிந்து அங்கு வந்த ராணி பென்னுார் ஊரக போலீசார், ராஜய்யாவை கைது செய்தனர். எஸ்.பி., யசோதா வன்டகோடி, சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

