ADDED : மே 06, 2026 04:08 AM
அ நிறம் | அளவு
சாம்ராஜ்நகர்: சைக்கிளின் பின்புறம் மினி லாரி மோதியதில், 11 வயது சிறுவன் உயிரிழந்தார்.
பெங்களூரை சேர்ந்த ஆனந்தராஜின் மகன் யஷ்வந்த், 11.
இவர், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் உள்ள தனது தாத்தா சிவலிங்கையாவின் வீட்டுக்குகோடை விடுமுறைக்காக சென்றார். சிறுவனுக்கு புதிய சைக்கிளை தாத்தா வாங்கி கொடுத்தார்.
தாத்தா வீட்டுக்கு அருகிலுள்ள சாலையில் நேற்று காலை சிறுவன் சைக்கிள் ஓட்டினார். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரி சைக்கிளின் பின்புறத்தில் மோதியது.
இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொள்ளேகால் போலீசார் விசாரிக்கின்றனர்.
